என் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கல..சினிமாவை விட்டு விலக நினைத்தேன்.. உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

சென்னை: அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. இந்த படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இப்படம் முக்கியமான படமாக மாறியுள்ளது. இதன் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் சினிமாவில் இருப்பது சிலருக்கு பிடிக்கவே இல்லை, என் வளர்ச்சியை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. யார் நீ இங்க என்ன செய்ற என்று என், முகத்திற்கு நேராகவே சிலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான், எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக ஒரு புன்னகையை மட்டுமே செய்துவிட்டு அந்த இடத்தில் இருந்து கடந்து இருக்கிறேன். இதுபோன்ற பல வலிகளை சந்தித்ததால், எதற்கு இந்த சினிமா என்று யோசித்து இருக்கிறேன்.

sivakarthikeyan interview amaran

மனைவி சொன்ன அந்த வார்த்தை: மூன்று வருடத்திற்கு முன் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். இதை என் மனைவி ஆர்த்தியிடம் சொன்ன போது, என் மனைவி, அஜித் மற்றும் விக்ரமிற்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில், சினிமா பின்னணி இல்லாமல், சினிமாவிற்குள் வந்து சாதித்த பிரபலங்கள் யாருமே இல்ல. நீங்க அதை செய்து இருக்கிறீர்கள். அது சாதாரணமான விஷயம் இல்லை. இதனால் இதை விட்டு விடாதீர்கள். இந்த முடிவை மட்டும் எப்போதும் எடுக்காதீங்க, உங்களுக்கு கிடைத்த புகழை கொண்டாடுங்க என்று ஊக்கமாக பேசினார். அவர் சொன்ன அந்த வார்த்தையால், நான் சினிமாவை விட்டு விலகும் முடிவை கைவிட்டேன்.

புகைப்பிடிக்கும் காட்சி: தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய படங்களை குழந்தைகள் அதிக அளவில் பார்த்து ரசித்து கொண்டாடுவதை திரையரங்கில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் என்னுடைய படங்களில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன். இதனால் இயக்குனர்களிடம் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்த்துவிடுங்கள், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன். ஆனால், கதாபாத்திரத்திற்கு புகைபிடிக்கும் காட்சி அவசியம் என்றால் நிச்சயமாக அதில் நான் நடிப்பேன் என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் பல விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X