பாதி சம்பளத்தை புடுங்கிடுறாங்க.. அமரன் 100வது நாள் விழாவில் கமல் முன்பாக சிவகார்த்திகேயன் பளிச்!
சென்னை: அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்காதது சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அமரன் படத்தின் 100வது நாள் விழாவில் சிவகார்த்திகேயன் சில தயாரிப்பாளர்கள் சம்பளத்தை பாதி புடுங்கிடுறாங்க என பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 350 கோடி வரை வசூல் செய்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே விஜய்யின் கோட் படத்திற்கு பிறகு அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் படம் மாறியது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்களை விட அமரன் படம் அதிக வசூல் அடைந்த நிலையில், கோலிவுட்டின் அடுத்த வசூல் மன்னன் சிவகார்த்திகேயன் தான் என்றனர்.
அமரனை முந்தாத விடாமுயற்சி: அமரன் படத்தின் வசூலை ஒரு வாரத்தில் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் முறியடித்துவிடும் என அஜித் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், விடாமுயற்சி படம் வெளியாகி முதல் வாரமே திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடாமல் தத்தளித்து 2வது வாரத்தில் தியேட்டர்களே காலியாக கிடக்கும் நிலை தான் உருவாகியுள்ளது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் பிக் லீக்கிற்கு வந்துவிட்டார். அஜித் குமார் தான் இன்னும் 200 கோடி வசூலை கூட தொடமுடியாமல் தவிக்கிறார் என்கின்றனர்.

100வது நாள் வெற்றி விழா: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அமரன் படம் வெற்றி தான் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்துக்கே இப்படியொரு விழாவை அவரால் கொண்டாட முடியாத நிலைதான் உள்ளது. இந்தியன் 3 படமும் வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். தக் லைஃப் படம் தான் இந்த ஆண்டு பந்தயம் அடிக்க வேண்டும் என்கின்றனர்.

சம்பளத்தை பாதி புடுங்கிடுறாங்க: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மட்டும் தான் தனக்கு படம் வெளியாவதற்கு 6 மாதங்கள் முன்னதாகவே முழு சம்பளத்தையும் கொடுத்தனர் என்றும் பல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என்றும் படம் வெளியாகும் போது பாதி சம்பளத்தை புடுங்கிட்டு போயிடுறாங்க என்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
யாரை சொல்றாரு?: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமரன் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், மாவீரன், பிரின்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதில், அயலான், பிரின்ஸ் படங்கள் தோல்வியடைந்த நிலையில், அந்த தயாரிப்பாளர்கள் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா? என நெட்டிசன்கள் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











