எனக்கு தமிழ்தான் பிடிக்கும்... யார் சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது டாக்டர். இந்தப் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன். படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில் படம் வெளியாகி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அவரது தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாகவும் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

டாக்டர் படம்

டாக்டர் படம்

எப்போதும் அலப்பறைகளுடன் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் தனது பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் மற்றவர்கள் இந்த அலப்பறைகளை கையில் எடுத்துக் கொண்டனர். படம் சீரியசான கதைக்களத்தை கையில் எடுத்திருந்தாலும் காமெடி படத்தில் தூக்கலாகவே காணப்பட்டது.

 டான் படத்தில் சிவகார்த்திகேயன்

டான் படத்தில் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்கள் எப்போதுமே சிறப்பாக அமையும். அதேபோல இந்தப் படத்திலும் சிறப்பாகவே அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் அதில் பங்கேற்று சிறப்பான கருத்துக்களை தெரிவித்தனர்.

ஷிவாங்கி அறிமுகம்

ஷிவாங்கி அறிமுகம்

இந்தப் படத்தின் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ள ஷிவாங்கி அறிமுகமாகியுள்ளார். அவர் குறித்து சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் பேட்டி ஒன்றில் தனக்கு தமிழ் மொழிதான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு தமிழ்தான் பிடிக்கும்

எனக்கு தமிழ்தான் பிடிக்கும்

இந்தி திணிப்பு குறித்து சினிமாத்துறையில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்கு தமிழ் மொழிதான் பிடிக்கும் என்று கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழ் சினிமா நடிகர்கள் இதுகுறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Cibi Chakaravarthi Exclusive Interview | Don movie |Filmibeat Tamil
இந்தித் திணிப்புக்கு எதிரான பேச்சு

இந்தித் திணிப்புக்கு எதிரான பேச்சு

எப்போதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருபவர். அவரது படங்களும் சர்ச்சை கருத்துக்களை முன்வைக்காமல் இயல்பான படங்களாக அமைகிறது. இந்நிலையில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X