Sivakarthikeyan: எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் போட்டியில்லை.. சிவகார்த்திகேயன் பளீச்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -மடோன் அஷ்வின் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது மாவீரன் படம்.
இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. சில தினங்களிலேயே அதிகமான கலெக்ஷனையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் தேங்ஸ் கிவ்விங் மீட் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். விஜய் சேதுபதியும் பங்கேற்றார்.

தனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் போட்டியில்லை என சிவகார்த்திகேயன் பேச்சு: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது மாவீரன் படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் தன்னுடைய வாய்ஸ் மூலம் இணைந்திருந்தார். ஒரு விபத்தில் நாயகனுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவம் மற்றும் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.
படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளது. கடந்த சில தினங்களிலேயே படம் சர்வதேச அளவில் 57 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 34 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தேங்ஸ் கிவ்விங் மீட்டை படக்குழுவினர் இன்றைய தினம் நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தன்னுடைய எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிலிருந்து அவர் சென்னை வந்துள்ளார். இந்த சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்பெற்றுள்ள போதிலும் இந்தப் படம் தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்று நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். எப்போதும் தன்னுடைய படங்களைத்தான் ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்றும் ஆனால் இந்தப் படத்தில்தான தன்னுடைய நடிப்பிற்கு பாராட்டு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி மற்றும் தோல்வி என்பது சகஜம்தான் என்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்வியை தொடர்ந்து எங்க வீட்டுப்பிள்ளை படம் சக்சஸ் ஆனதாகவும் ஹீரோ படத்தின் தோல்வியை தொடர்ந்து டாக்டர் படம் சக்சஸ் கொடுதததாகவும் தற்போது பிரின்ஸ் படத்தின் தோல்வியை அடுத்து மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் மேலும் கூறியுள்ளார். தன்னை பொருத்தவரை வெற்றியை ஒரு பயணமாகவே கருதுவதாகவும் அதை இலக்காக வைத்துக் கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், மீண்டும் மடோன் அஷ்வினுடன் இணைந்து படத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதேபோல விஜய் சேதுபதிபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவும் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். தனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் போட்டி நிலவுவதாக அதிகமானோர் கூறிவருவதாகவும் ஆனால் அதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ள சிவகார்த்திகேயன், விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











