Sivakarthikeyan Speech: இது அண்ணன் தம்பி பொங்கல்.. விஜய் வாழ்த்து.. பராசக்தி சிவகார்த்திகேயன் நச்!

சென்னை: ஜன நாயகன் படத்துடன் போட்டி, இசை வெளியீட்டு விழாவுடன் போட்டி என தொடர்ந்து விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டு வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 33 வருஷம் நம்மள என்டர்டெயின் பண்ணியிருக்காரு.. அவர் படத்தை கொண்டாடுவோம் என சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவரது 100வது படம். சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம்.

Sivakarthikeyan says there is no issue with me and my brother Vijay at Parasakthi Audio Launch
Photo Credit:

ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் மீது விஜய்க்கு அளவு கடந்த பாசம் உள்ள நிலையில், திடீரென பொங்கல் போட்டியால் இருவருக்குமிடையே பிரச்சனை என ரசிகர்கள் சண்டைகள் வெடித்த நிலையில், "இது அண்ணன் தம்பி பொங்கல்" என்றே சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

விஜய்யுடன் போட்டி ஏன்?: "நாங்க முதல்ல பராசக்தி படத்தை தீபாவளிக்குத்தான் பிளான் பண்ணோம். அப்புறம் விஜய் அண்ணா படம் அக்டோபர் என சொன்னதும் நாம பொங்கலுக்கு போயிடலாம்னு தயாரிப்பாளரிடம் சொல்லி அதுக்காக பிளான் பண்ணோம். ஆனால், திடீரென ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு வருதுன்னு சொன்னதும் நான் உடனே ஜெர்க் ஆகிட்டேன். நான் உடனே ஆகாஷ் பிரதருக்கு போன் பண்ணிட்டேன். ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு வருதாமே, நாம எந்த டேட்டுக்கு புஷ் பண்ணலாம்னு கேட்டேன்.

விஜய் மேனேஜருக்கு போன் போட்டேன்: தயாரிப்பாளர் என்ன சொல்லிட்டாருன்னா, நம்ம இன்வெஸ்ட்டர்ஸ்க்கு எல்லாம் பொங்கல்னு சொல்லிட்டோம். இதுக்கு மேல புஷ் பண்ணா சம்மருக்குத்தான்னு சொன்னாரு.. மேலும், அப்போ எலக்‌ஷன் வேற வருது. அதனால், நான் ஓகேன்னு சொல்லிட்டேன். ஆனால், ஏதோ ஒன்று டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது. உடனடியாக விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷ் ப்ரோக்கு போன் போட்டேன். என்ன ப்ரோ ஜன நாயகன் மற்றும் பராசக்தி பொங்கலுக்கு வருதுன்னு கேட்டேன். ரெண்டு படம் தானே ப்ரோ.. பொங்கலுக்கு அதெல்லாம் தாராளமா வரலாம்னு சொல்லிட்டார்.

Sivakarthikeyan says there is no issue with me and my brother Vijay at Parasakthi Audio Launch
Photo Credit:

வாழ்த்திய விஜய்: உங்களுக்கு பிரச்சனை இல்லை. எனக்குத்தான். நீங்க ஒரு வாட்டி விஜய் சாருக்கிட்ட பேசிட்டீங்கனான்னு கேட்டேன். அப்புறம் விஜய் சாரிடம் பேசிவிட்டு, லைன்ல வந்தார். அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். எஸ்கேவுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்கன்னு சொன்னார் என்று கூறினார். அதனால மக்களே.. 33 வருஷம் நம்ம எல்லாரையும் ஒருத்தர் என்டர்டெயின் பண்ணிருக்காரு. ஜனவரி 9ம் தேதி ஜன நாயகனை கொண்டாடுங்க.. ஜனவரி 10 பராசக்தியை கொண்டாடுங்க.. யாரு என்ன வேணா சொல்லட்டும் இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் என சிவகார்த்திகேயன் பேச ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X