Sivakarthikeyan: ஷங்கர் படத்தில் நடிக்க.. அதிதி ஷங்கரை வைத்து பக்கா பிளான் போட்ட சிவகார்த்திகேயன்?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஷங்கர் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்காத நிலையில், அதிரடியாக டோலிவுட் ஹீரோவான ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் ஷங்கர்.
மேலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் நிறைவு செய்யும் வேலைகளை தென்னாப்பிரிக்காவில் தீயாய் இறங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பதற்காக அதிதி ஷங்கர் மூலமாக சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

மாவீரன் ரிலீஸ் தேதிக்கு வந்த சிக்கல்: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படமும் அதே தேதியில் வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று வெளியாக சிவகார்த்திகேயன் செம அப்செட் ஆகி விட்டாராம்.
ரஜினிகாந்தின் பட டைட்டிலான மாவீரன் டைட்டிலில் நடிக்கும் சிவகார்த்திகேயன் டைட்டிலுக்கு ஏற்றபடி ரஜினிகாந்த் உடன் அதே நாளில் மோதுவாரா? அல்லது அவர் மீது இருக்கும் பாசம் காரணமாக ரிலீஸ் தேதியை மாற்றுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.
ஷங்கர் படத்தில் நடிக்க ஆசை: மாவீரன் படத்தை முடித்து விட்டு கமல் தயாரிப்பில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன் எப்படியாவது அடுத்து ஷங்கர் படத்தை பிடித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி உள்ளன.
மகளை வைத்து தூது: மேலும், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் நிலையில், அடிக்கடி ஷங்கரை சந்திக்கும் வாய்ப்பும் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்து வருகிறதாம்.

மாவீரன் படத்தின் பூஜைக்கே ஷங்கர் வந்திருந்த நிலையில், அதிதி ஷங்கரை தூதாக வைத்து அவர் அப்பா படத்தில் நடிக்க வாய்ப்பை பிடிக்க சிவகார்த்திகேயன் பக்கா பிளான் போட்டு வருகிறார் என்கின்றனர்.
வேள்பாரி படத்தில் வாய்ப்பு கிடைக்குமா?: இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை முடிக்கும் தருவாயில் இருக்கும் ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யா அல்லது கன்னட நடிகர் யஷ் லீடு ரோலில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தட்டிப் பறித்து விட சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார் என்றும் இயக்குநர் ஷங்கர் மனசு வைப்பாரா? என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











