தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இளம் நடிகைகள் முதல் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் வாழ்த்தாக நடிகர் சிவகார்த்திகேயனும் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தனுஷ் பர்த்டே

தனுஷ் பர்த்டே

நடிகர் தனுஷின் 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட காமன் டிபிக்களும் வெளியாகின.

மாறன்

மாறன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 43வது படத்திற்கு மாறன் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே மாதவன் நடிப்பில் மாறா எனும் படம் வந்த நிலையில், தனுஷ் படத்துக்கு மாறன் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

நடிகைகள் வாழ்த்து

நடிகைகள் வாழ்த்து

கீர்த்தி சுரேஷ், அம்ரிதா அய்யர், வரலக்‌ஷ்மி சரத்குமார், மாளவிகா மோகனன் என ஏகப்பட்ட தமிழ் சினிமா நடிகைகள் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர். மோகன்லால், சரத்குமார், அமிதாஷ் உள்ளிட்ட நடிகர்களும் வாழ்த்து கூறினர்.

தனுஷ் சார்

தனுஷ் சார்

நடிகர் சிவகார்த்திகேயன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவது போல நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஹாப்பி பர்த்டே தனுஷ் சார் என்று கூறி மாறன் படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தலைவன் தங்கம்யா

தலைவன் தங்கம்யா

இப்படியொரு வாழ்த்து ட்வீட்டை எதிர்பார்க்கவே இல்லை என்றும், தங்கமான மனுஷன்.. இந்த மாறி மனுஷன கீழ் தள்ளனும்னு எப்படிடா மனசு வருது ஒரு சில தனுஷ் ரசிகர்களுக்கு என்றும் தலைவன் தங்கம்யா என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X