பகையெல்லாம் இல்லைங்க.. பக்காவாக தனுஷுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி ரோலில் தனுஷ் உடன் பள்ளிப் பருவ காலத்தில் நடித்து இருப்பார் சிவகார்த்திகேயன்.

தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்கள் அவருக்கு மாஸ் நடிகர் அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.

தனுஷ் பிறந்தநாள்

தனுஷ் பிறந்தநாள்

நடிகர் தனுஷின் 39வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி ட்வீட் போட்டு வருகின்றனர். நெட்பிளிக்ஸில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதன் அடுத்தடுத்த பாகங்களிலும் அவிக் சான் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வரலக்‌ஷ்மி சரத்குமார் வாழ்த்து

வரலக்‌ஷ்மி சரத்குமார் வாழ்த்து

தனுஷ் உடன் மாரி 2 படத்தில் நடித்த வரலக்‌ஷ்மி சரத்குமார் குளோபல் ராக்ஸ்டார் தனுஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் மேலும், மேலும் பெரிய பெரிய உயரங்களை நீங்கள் அடைய வேண்டும். உங்கள் வாழ்க்கை முழுவதுமே சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் என வாழ்த்தி உள்ளார்.

கென் கருணாஸ்

கென் கருணாஸ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ், நீங்க உண்மையிலேயே கூலஸ்ட் குரு, மற்றும் என் வாழ்வின் சப்போர்ட்டிங் சிஸ்டமாக பல விஷயங்களில் இருந்துள்ளீர். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி சார் என தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் வாழ்த்தி உள்ளார்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

நடிகர் பிரசன்னா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார்.. இந்த ஆண்டு இனிதாக அமையட்டும்" என வாழ்த்தி ட்வீட் போட்டு இருக்கிறார்.

பிரதர் பாண்ட்

பிரதர் பாண்ட்

தனுஷின் '3' படத்தில் ஆரம்பித்த அண்ணன் தம்பி உறவு, எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என தொடர்ந்த உறவு என்றுமே அதே போல நீடித்துக் கொண்டே இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டை கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும் இடையே பிரச்சனை, பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று வெளியான தகவல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X