பராசக்தி டீமுக்கு பிரியாணி போட்ட சிவகார்த்திகேயன்.. சூப்பர்னு சொன்ன சுதா கொங்கரா.. அதர்வா ஹேப்பி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படக்குழுவுக்கு ஷூட்டிங் சமயத்தின் போது பிரியாணி போட்ட வீடியோவை சற்றுமுன் இயக்குநர் சுதா கொங்கரா ஷேர் செய்து எஸ்கே ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் கட்டிங்கும் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் மூலம் பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீஸிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடையாமல் இருந்து வந்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுக் கொடுத்தார் சுதா கொங்கரா.

Sivakarthikeyan sudha kongara parasakthi

சுதா கொங்கரா ஷேர் செய்துள்ள இந்த வீடியோவுக்கு கீழ் சில சூர்யா ரசிகர்கள் அவரை மோசமாக திட்டி கமெண்ட்டுகளை போட்டு வருவது சரி கிடையாது என சூர்யா ரசிகர்களே கண்டித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று என்கின்றனர்.

பராசக்தி பட ஹீரோடா: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில், அந்த படம் 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தியது. சமீபத்தில் 100வது நாள் வெற்றி விழாவும் நடைபெற்றது. இந்த படம் எல்லாம் எப்போதாவது தான் கிடைக்கும் அடுத்த சிவகார்த்திகேயன் படம் பெரிதாக அமையாது என நினைத்த சில ஹீரோக்களுக்கு சிம்ம சொப்பனம் போல மதராசி மற்றும் பராசக்தி பட ஹீரோடா என சிவகார்த்திகேயன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை பார்த்து கோலிவுட்டே ஆடிப்போய் கிடக்கிறது.

Sivakarthikeyan sudha kongara parasakthi

பிரியாணி போட்ட சிவகார்த்திகேயன்: கடந்த பிப்ரவரி 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பராசக்தி படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் மதிய உணவாக பிரியாணி போட்ட வீடியோவை சற்றுமுன் இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சுடச்சுட சுதா கொங்கராவுக்கு பிரியாணியை எடுத்து சிவகார்த்திகேயன் பரிமாறும் காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சூப்பர்னு சொன்ன சுதா கொங்கரா: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 2 படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா இந்தி திணிப்புக்கு எதிரான தரமான படமாக பராசக்தி படத்தை தயார் செய்துக் கொண்டிருக்கிறார். மும்மொழி கொள்கை என மீண்டும் இந்தி திணிப்புக்கு பாஜக அரசு வழிவகுப்பதாக தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பராசக்தி படம் இந்த ஆண்டே வெளியானால் பக்காவாக இருக்கும் என்கின்றனர். சூடான பிரியாணியை சிவகார்த்திகேயன் கையால் பரிமாற அதை சுவைத்த சுதா கொங்கரா சூப்பர் என சொன்னது மட்டுமின்றி அருகே பிரியாணி ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அதர்வாவையும் சூப்பர் என சொல்ல வைத்துள்ளார்.

ரவி மோகன், ஸ்ரீலீலா இல்லை: சுதா கொங்கரா, அதர்வா உள்ளிட்ட படக்குழுவினர் பிரியாணி சாப்பிட ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா இல்லாததை ரசிகர்கள் நோட் செய்துள்ளனர். அதர்வாவுக்கு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கூடவே டிராவல் ஆகும் கதாபாத்திரம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அமரன் படத்திற்காக வேறுமாதிரியான உடல் தோற்றத்திற்கு மாறிய சிவகார்த்திகேயன் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பராசக்தி படத்தில் நடித்து வருவதை பார்த்த ரசிகர்கள் பாடி டிரான்ஸ்பர்மேஷன் செய்தால் இப்படி செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X