கோட் சூட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்..வெறித்தனமாக கலாய்த்த இயக்குனர் !
சென்னை : தமிழ் சினிமாவின் இளவரசனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது சமூக அக்கறையுள்ள படங்கள், சயின்டிபிக் படங்கள் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது தயாராகி கொண்டிருக்கும் படம் டாக்டர். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கிவருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் செம்ம ஸ்மார்ட்டாக ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்திருந்தார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டி வரும் வேளையில் இயக்குனர் நெல்சன் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை மரண கலாய் கலாய்த்து வருகிறார்.
"Change a Child's life. Please Donate"

அன்யோன்யமாக
பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது இயக்குனர்களும் நடிகர்களும் கதைகளில் மட்டுமே ஒன்றி செயல்படுவார்கள் மற்றபடி அவ்வளவு அன்யோன்யமாக யாரும் இருந்ததில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் அதில் முற்றிலும் வேறுபட்டவர் இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் இயக்குனர்களுடனும் ஒரு நல்ல நட்பை ஏற்படுத்தி அன்யோன்யமாக பழகி வருவார்.

முதல் முறையாக
இந்நிலையில் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் டாக்டர் என்ற படத்தில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதன் போஸ்டர்கள் கூட சமீபத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. எனினும் இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றும்போது நல்ல நண்பர்களாக இருந்து வந்தவர்கள் தற்போது முதல் முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

போட்டோ ஷூட்
சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் டி ஷர்ட்டுடன் உள்ள தனது புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில் போறபோக்குல ஒரு போட்டோ ஷூட் என குறிப்பிட்டுள்ளதை பார்த்து நெல்சன் கலாய்த்து இருந்தார்.

மீண்டும் போற போக்குல
இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் சும்மா கெத்தா கோட்டு சூட்டுடன் மாஸாக இடுப்பில் கை வைத்தவாறு ஒரு காரின் முன் நின்று போஸ் கொடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "மீண்டும் போற போக்குல ஒரு போட்டோ ஷூட்" என குறிப்பிட்டு இருந்தார்.

ப்ளீஸ் கோ..
இந்த போட்டோவை பார்த்த இயக்குனர் நெல்சன் " போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா?? அப்போ பிளான் பண்ணி பண்ணி இருந்தா வேற மாதிரி போலயே, ஸ்டைலா இருக்கிங்க" என தனது பாணியில் வஞ்சப்புகழ்ச்சி அணியில் சிவகார்த்திகேயனை புகழ்ந்தார் நெல்சன். இருக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் "ப்ளீஸ் கோ.. எப்ப பார்த்தாலும் இன்ஸ்டால.. எனக்கு தெரியும் நீங்க என்ன பண்றீங்கன்னு.. போங்க போங்க" என சிவகார்த்திகேயன் திரும்ப கலாய்த்து பதிலளித்திருந்தார்.

தப்பா பேசுறீங்களே
கமெண்ட்ட போட்டோமா ரெண்டு கலாய் கலாய்சேமா கடையை சாத்திட்டு போய் காப்பி தண்ணி குடிச்சாமானு இருங்க இயக்குனரே.. இன்ஸ்டாலயே சுத்திகிட்டு தெரியக்கூடாது. அதற்கு பதிலளித்த நெல்சன் "யாரு நாங்க?? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமெண்ட் போட தான் இன்ஸ்டால சுத்திக்கிட்டு இருக்கோம்.. என்னைப்போய் தப்பா பேசுறீங்களே.."

தப்பித்து விட்டார்
இவரின் பதிலை பார்த்த சிவகார்த்திகேயன் "ஐயா என்னய்யா கூடக்கூட பேசுறீங்க.. எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்காரு நம்ம வேற ஆள பார்ப்போம்". என சூதானமாக இயக்குனரிடம் இருந்து தப்பித்து விட்டார் சிவகார்த்திகேயன்.
Recommended Video

படம் வெளிவந்தால்
இதனை கவனித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இவர்கள் இன்ஸ்டாகிராம்லயே இவ்வளவு அக்கப்போர் பண்றாங்களே, இவங்களோட டாக்டர் படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் என மகிழ்ச்சியுடன் தங்களது கமெண்ட்களையும், வாழ்த்துக்களையும் அள்ளிவிட்டு இவர்களின் டாக்டர் படம் எப்போது வெளியாகும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











