Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் அப்பா இப்படிப்பட்டவரா? பிறந்த நாளில் மகன் போட்ட நெகிழ்ச்சி பதிவு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டருக்கு சில காலம் குட்பை சொல்லி இருந்த நிலையில், திடீரென அவரது ட்வீட்டை பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்த விஷயத்தை அவரது டீம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், தனது தந்தை தாஸின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் சிவகார்த்திகேயன் போட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Sivakarthikeyan shares about his late Father kindness towards prisoners

அப்பா குறித்து சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் வாட்ஸ் அப் பதிவு, "நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ்.

கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார். என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் ஜி.தாஸ் அவர்கள்.

சிறைப்பறவைகளை அடிக்கக் கூடாது: சிறைப்பறவைகளை என்றும் அடிக்கக் கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்குக் கல்வியைப் புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லாத் தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு. அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி. தாஸ்.

கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிழ்ந்தவர். இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா" என்று தன் தந்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி: அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டு நடிகர் சிவகார்த்திகேயன், "'அப்பா.... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே'. என பதிவிட்ட சிவகார்த்திகேயன் ஆங்கிலத்தில், நான் இன்று என்னவாக இருந்தாலும், அதற்கு நீங்கள் தான் காரணம், எப்போதுமே உங்களை பெருமைப்பட வைக்கும் மகனாகவே இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வரும் ஜூலை 2ம் தேதி மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X