Amaran: சின்ன தளபதி.. சிவகார்த்திகேயனை பார்த்து கத்திய ரசிகை.. அமரன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், கீதா கைலாசம் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் என சோஷியல் மீடியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராஜ்கமல் நிறுவனம், சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் புரொடக்ஷன் வேல்யூ அந்தளவுக்கு தரமாக உள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே மாறியுள்ளார். சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பாத்திரத்தை ஏற்று அப்படியே நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

காமெடி, காதல், வீரம், தேசப்பற்று, மோடிவேஷன், தியாகம் என அனைத்தையும் கலந்துக்கட்டி ஒரு பயோபிக் படத்தை ராஜ்குமார் பெரியசாமி கொடுத்துள்ளார். படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்ன பாராட்டுக்களை பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய சிவகார்த்திகேயனை ரசிகை ஒருவர் சின்ன தளபதி என கத்தி கூச்சலிட்டு அழைத்தார்.
சின்ன தளபதி: இளைய தளபதி, தளபதி என விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது தவெக தலைவராக மாறியுள்ளார். கோட் படத்தில் விஜய் கொடுத்த துப்பாக்கியை சரியாக சிவகார்த்திகேயன் பயன்படுத்தியுள்ளார் என்றும் சரியான நபருக்குத்தான் விஜய் துப்பாக்கியை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கோலிவுட்டின் எதிர்கால பாக்ஸ் ஆபிஸ் கிங்காக சிவகார்த்திகேயனை கொண்டாடி வரும் நிலையில், ரசிகை ஒருவர் சின்ன தளபதி என கூச்சலிட்டுக் கத்தினார்.
சிவகார்த்திகேயன் ரியாக்ஷன்: ஆனால், உடனடியாக சின்ன தளபதி எல்லாம் இல்லைம்மா, உங்க அன்புக்கு நன்றி, அதெல்லாம் வேண்டாம் என ஆன் தி ஸ்பாட்டிலேயே எந்தவொரு டைட்டிலும் தனக்கு வேண்டாம் என்பது போல பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தளபதி பட்டத்துக்கு மட்டுமின்றி எந்தவொரு பட்டத்துக்கும் ஆசைப்படாமல் தனக்கான பாணியை சிவகார்த்திகேயன் தேர்வு செய்வார் என்றே தெரிகிறது. அமரன் படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் என அனைவருக்குமான ரெஃபரன்ஸ்கள் நிறையவே இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு ராணுவ வீரரின் வீரம்: சென்னையில் இருந்து முகுந்த் வரதராஜன் ராணுவத்துக்கு சென்றது. நாட்டுக்காக கடினமாக உழைத்து மேஜராக உயர்ந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லும் வேட்டையில் வீர மரணம் அடைந்த கதையை எடுத்து நடித்திருப்பதை பார்த்து பூரித்துப் போனேன். நல்லா பண்ணியிருக்கீங்க என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார் என சிவகார்த்திகேயன் படம் பார்த்து முடித்த பின்னர் கூறினார்.
பல இடங்களில் கிளாப்ஸ்: அமரன் படம் முழுக்க முழுக்க இந்திய ராணுவ வீரர்களுக்கான ட்ரிப்யூட்டாகவே இருக்கும். கமல் சார் படத்தை பார்த்து விட்டு நல்லா பண்ணியிருக்கோம். மக்கள் எப்படி பார்க்குறாங்கன்னு பார்ப்போம் என்றார். தியேட்டரில் மக்களுடன் படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் கிளாப்ஸ் சத்தம் கேட்டது. எமோஷனல் டச் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. இதுபோதும் என சிவகார்த்திகேயன் பேசிவிட்டு சென்றார்.
200 கோடி வசூல் வருமா?: இந்த தீபாவளிக்கு வெளியான 4 படங்களுமே ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ஸ்டார்டம் உடன் அமரன் படத்திற்கு கிடைத்து வரும் விமர்சனங்கள் காரணமாக அந்த படம் தாராளமாக 200 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாள் தீபாவளி விடுமுறையில் எந்தளவுக்கு அமரன் வசூல் வேட்டையாடுகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றே தெரிகிறது. சிவகார்த்திகேயன் முதல் முறையாக 150 கோடி முதல் 200 கோடி பாக்ஸ் ஆபிஸை தாண்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











