ஒருபக்கம் பற்றி எரியுது.. பரிதாபங்கள் கோபி, சுதாகருடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. வேற லெவல் போங்க
சென்னை: பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் தனது டீமுடன் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு சொசைட்டி பாவங்கள் வீடியோவை வெளியிட்டார்கள். அந்த வீடியோ பலரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஓ காட் பியூட்டிஃபுல் என்ற படத்தை தயாரித்து லீடு ரோலில் அவர்கள் நடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் யூடியூப் சேனல்களில் பரிதாபங்கள் சேனல் ரொம்பவே ஃபேமஸ். சமூகத்தில் நடக்கும் அவலங்கள், அரசியல் நையாண்டியுடன் கூடிய கன்டென்ட்டுகள் அவர்களது வீடியோவில் இருப்பது வழக்கம். அந்த வீடியோக்கள் அனைத்துமே நெட்டிசன்களிடம் உடனடியாக ட்ரெண்டாகிவிடும். அவர்களுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அவர் போடும் வீடியோக்களும் மில்லியன் கணக்கிலான வியூஸ்களை எடுத்துவிடும்.
சொசைட்டி பாவங்கள்: சூழல் இப்படி இருக்க கவினை சுர்ஜித் ஆணவ படுகொலை செய்த விவகாரம் பெரும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையி; ஆதிக்க சாதியினரின் மனப்போக்கு, அவர்களின் தேவையில்லாத பந்தா, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை விமர்சித்தும், கிண்டல் செய்தும் சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.

பயங்கரமான வரவேற்பு: ஆணவ கொலை தொடர்பாக பலரும் பேச தயங்கிய நிலையில் இவர்கள் தைரியமாக போட்ட வீடியோ பலரையும் கவர்ந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை வழங்குகிறார்கள். குறிப்பாக அந்த சேனலுக்கு தங்களால் முடிந்த நன்கொடையையும் கொடுக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோரும் சொசைட்டி பாவங்கள் வீடியோவுக்கும், பரிதாபங்கள் டீமுக்கும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தார்கள்.
மிரட்டிய தயாரிப்பாளர்: இதுபோன்ற வீடியோக்கள் போட்டால் கண்டிப்பாக மிரட்டல் வரத்தானே செய்யும். அதன்படி தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் நேற்று கோபியையும், சுதாகரையும் மறைமுகமாக மிரட்டி வீடியோ வெளியிட்டார். ஆனால் நெட்டிசன்களோ அந்தத் தயாரிப்பாளரை வைத்து செய்துவிட்டார்கள். அவர் மட்டுமின்றி இன்னும் சில ஆதிக்க சாதி வெறி ஊறிப்போனவர்கள் மிரட்டல் விடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஓ காட் பியுட்டிஃபுல்: சூழல் இப்படி இருக்க அவர்கள் பரிதாபங்கள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஓ காட் பியூட்டிஃபுல் என்ற படத்தை தயாரித்துவருகிறார்கள். இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்குகிறார். கோபியும், சுதாகரும் லீடு ரோலில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் வேணும் மச்சா பீஸ் என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடுகிறார்.
அதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனிடம் சுதாகர் வயலின் வாசித்து காண்பிப்பது உள்ளிட்ட ஜாலியான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை பார்த்த வலைதளவாசிகள் சொசைட்டி பாவங்கள் என்ற பெரிய சம்பவத்தை செய்துவிட்டு எஸ்கேவுடன் ஜாலி செய்றாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து இப்படம் வெற்றி பெற வாழ்த்திவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











