Sivakarthikeyan: இரண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்... விடாமல் துரத்தும் AR முருகதாஸ்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்கே 21 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க, சிவகார்த்திகேயன் இரண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan asked for 40 crore salary to act in AR Murugadoss film

உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன் சம்பளம்: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

எஸ்கே 21 படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் தர்பார் தோல்விக்குப் பின்னர், படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார் ஏஆர் முருகதாஸ். இதனால் ஹீரோவே இல்லாமல் அனிமேஷன் படம் இயக்க முடிவு செய்திருந்த அவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே ஏஆர் முருகதாஸுடனான கூட்டணி குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். சூப்பர் மேன் கான்செப்ட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், இதுவரை டேக் ஆஃப் ஆகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது டோலிவுட்டைச் சேர்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று, சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாம்.

இதனால், விரைவில் சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்தப் படத்தில் நடிக்க, 40 முதல் 45 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறாராம் சிவகார்த்திகேயன். இதுவரை 25 முதல் 30 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் இயக்குநர் ஏஆர் முருகதாஸும் 40 கோடி சம்பளம் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதன்படி, சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ் இவர்களது சம்பளம் மட்டுமே சுமார் 90 கோடி வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர பட தயாரிப்புக்காக மட்டும் 150 முதல் 200 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X