Sivakarthikeyan: SK 21 படத்துக்காக வெறித்தனம் காட்டும் சிவகார்த்திகேயன்... ட்ரெண்டாகும் மாஸ் போட்டோ

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மாவீரன்.

இதனிடையே தனது 21வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்காக வெறித்தனமாக மாஸ் காட்டி வரும் சிவகார்த்திகேயனின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan changed into a six-pack for SK 21 film

ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயனின் நியூ லுக்: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் தடுமாறி நின்ற சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் நல்ல கம்பேக் கொடுத்தது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 85 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் அமேசான் ப்ரைமில் வெளியான மாவீரனுக்கு ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே உற்சாகத்துடன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு SK 21 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

SK 21 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே SK 21 படத்துக்காக ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். அது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மங்கி கேப் உடன் வலம் வருகிறார்.

 Sivakarthikeyan: Sivakarthikeyan changed into a six-pack for SK 21 film

இதுவரை கெட்டப் மாற்றி நடிக்காத சிவகார்த்திகேயன், SK 21 படத்திற்காக ஹேர்ஸ்டைலை சேஞ்ச் செய்ததோடு, சிக்ஸ் பேக் வைத்தும் மாஸ் காட்டியுள்ளதாக போட்டோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் மிரட்டலான டெரர் லுக்கில் காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன். இதுவரை சிவகார்த்திகேயனை இப்படி பார்க்காத ரசிகர்கள், இந்த போட்டோவால் செம்ம வைப் ஆகியுள்ளனர். அதே நேரத்தில் இதன் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மிலிட்டரி ப்ளஸ் ஆக்‌ஷன் ஜானர் படமாக உருவாகும் SK 21, உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதற்காக தான் சிவகார்த்திகேயனும் ரொம்பவே ஹார்ட் ஒர்க் செய்துவருவதாக தெரிகிறது. சிவாவின் கேரியரில் SK 21 மிக முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினரே கூறி வருவதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X