Sivakarthikeyan: SK 21-ல் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுதானா..? முதன்முறையாக ரிஸ்க் எடுத்த எஸ்கே!
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக சிவகார்த்திகேயன் எடுத்த ரிஸ்க்
சின்ன திரையில் இருந்து கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். மினிமம் பட்ஜெட், சூப்பரான வசூல் என தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவா, தற்போது எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்கே 21 படத்தில் இருந்து ஒரு சீன் இணையத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் இந்த வீடியோ மூலம் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் கேரக்டர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆபிஸராக நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. இப்போது மேலும் ஒரு அப்டேட்டாக அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இரட்டை வேடங்களில் நடித்திடாத சிவகார்த்திகேயன், முதன்முறை எஸ்கே 21 படத்தில் டபுள் ஆக்ஷன் ரோலில் மாஸ் காட்டியுள்ளாராம்.
இதற்காக ஹேர் ஸ்டைலுடன் தனது கெட்டப் மாற்றியதால் தான், சில தினங்களாக தலையில் கேப் மாட்டியபடி வலம் வந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெளியாகிறது.
அப்போது எஸ்கே 21 படத்தின் டீசர், டைட்டில் ஆகியவையும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், எஸ்கே 21 திரைப்படம் அடுத்தாண்டு சம்மர் அல்லது ஆயுத பூஜை வெளியீடாக திரைக்கும் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











