Sivakarthikeyan: ஸ்மார்ட் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்.. இளம் இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் இயக்குநர் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sivakarthikeyan: Sivakarthikeyan Joining Hands With Good Night Movie Director Vinayak Chandrasekaran

அதன்படி, சிவகார்த்திகேயனுடன் குட்நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இளம் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியானது. கடந்த ஜூலை மாதம் ரிலீஸான மாவீரன் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனது 21வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் சிவாவின் அயலான் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸாகவுள்ள அயலான், சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இதுபற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த மாதம் எஸ்கே 23 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய படம் பற்றியும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது 24வது படத்தின் இயக்குநரை சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டாராம். அதன்படி சிவகார்த்திகேயனின் எஸ்கே 24 படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு வெளியான மினிமம் பட்ஜெட் படங்களில் 'குட் நைட்’ சூப்பர் ஹிட் அடித்தது. மணிகண்டன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். குறட்டை பிரச்சினையை பின்னணியாக வைத்து காமெடியாக உருவான குட் நைட், எதிர்பாரத வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம், ஓடிடி ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை.

இதனையடுத்து சிவகார்த்திகேயனை சந்தித்த இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், சூப்பரான கதை ஒன்றை கூறியுள்ளார். சிவாவுக்கும் அந்த கதை பிடித்துவிட்டதால், இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு அட்வான்ஸுடன் கால்ஷீட்டும் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் - விநாயக் சந்திரசேகரன் கூட்டணி குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கதை வித்தியாசமான ஜானரில் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X