Sivakarthikeyan: “செம்ம ஃபீல்குட் மூவி..” ஜோ படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்!!

சென்னை: ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan met and appreciated Joe Team

இந்நிலையில் ஜோ படத்தை ஹீரோ ரியோ ராஜ், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவுடன் சிவகார்த்திகேயன் பார்த்து ரசித்தார்.

பின்னர் ஜோ படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

ஜோ படக்குழுவுடன் சிவகார்த்திகேயன்
விஜய் டிவி பிரபலமான ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஜோ. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களைத் தொடர்ந்து, ஜோ மூவியில் நடித்துள்ளார் ரியோ ராஜ். ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரியோ ராஜ்ஜுடன் மாளவிகா மனோஜ், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் திரையரங்குகளில் வெளியான ஜோ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 90ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜியாவுடன் காதல் பின்னணியில் உருவாகியுள்ளது ஜோ. கல்லூரி காதல், பிரிவு, கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் என படம் சூப்பராக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் கொடுத்துள்ளனர்.

முதல் பாதியில் ஒரு கதையும், இரண்டாம் பாதியில் இன்னொரு கதையுமாக உருவாகியுள்ளதாம் ஜோ. ஆனால், முதல் கதையில் இருந்து ஒரு லீட் எடுத்து, அதனை க்ளைமேக்ஸில் வைத்துள்ளது சூப்பர் என பாராட்டி வருகின்றனர். ஹீரோ ரியா ராஜுக்கு கம்பேக் கொடுத்துள்ள ஜோ படத்தை திரை பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அவர்களில் முதல் ஆளாக, ரியோ ராஜ், இயக்குநர் உள்ளிட்ட மொத்த படக்குழுவுடன் சேர்ந்து ஜோ படத்தை பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன். படம் பார்த்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், ஜோ படக்குழுவை மனதார பாராட்டினாராம். அப்போது ஜோ படக்குழுவினருடன் போட்டோ எடுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன். அதேபோல், ரியோ ராஜ், அவரது குடும்பத்தினருடனும் சிவகார்த்திகேயன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

ஜோ படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனால், ஜோ படத்துக்கு ரசிகர்களிடம் மேலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ரியோ ராஜுக்கு சப்போர்ட்டாக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது அவருக்காக ஜோ படம் பார்த்து வைப் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X