Sivakarthikeyan: வீடியோ எடுத்த ரசிகர்... திரும்பிப் பார்க்காமல் சென்ற சிவகார்த்திகேயன்..!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல், அவரது அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், வீடியோ எடுத்த ரசிகரை திரும்பிப் பார்க்காமல் செல்லும் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகி வருகிறது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan refused his fan for a selfie... Video trending on Twitter

திரும்பிப் பார்க்காமல் சென்ற சிவகார்த்திகேயன்
விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவா ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய SK 21 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் தீபாவளி ரேஸில் பொங்கலுக்கு சென்றுவிட்டது. ரஜினியின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களுடன் மோதவிருக்கும் அயலான், மாஸ் காட்டும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான், இனிமேல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்கமாட்டேன் என்றார். தனது குடும்ப விவகாரத்தில் அவர் துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் சிவாவுடன் இனி எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி பகீர் கிளப்பினார். டி இமானின் இந்த பேட்டி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டி இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல் அவருக்கு எதிராக சிலர் சதி செய்வதாகவும், அதன் ஒருபகுதி தான் டி இமானின் பேட்டி எனவும் சொல்லப்பட்டது. ஆனால், சிவா இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுக்கவில்லை.

"பொய்க்கு ஏன் நான் விளக்கம் தரணும்னு" என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்று டிவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேஷ்டி சட்டையுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக வீட்டுக்குள் செல்கிறார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் விரும்பியதாகத் தெரிகிறது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan refused his fan for a selfie... Video trending on Twitter

ஆனால், அவர் வேண்டாம் என சொல்வது போல கையை காட்டிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் செல்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சிவகார்த்திகேயன் ரசிகரை சந்திக்காமல் செல்வது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் சிவா செல்ஃபி எடுத்துவிட்டு அதன்பின்னர் தான் அந்த ரசிகருக்கு கை காட்டிவிட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X