Sivakarthikeyan: “இது சிவகார்த்திகேயனா இல்ல பாலிவுட் ஹீரோவா..” Wow! SK 21 லுக் இதுதானா..?

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

எஸ்கே 21 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எஸ்கே 21 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Sivakarthikeyan: Sivakarthikeyan’s SK 21 look photo trending on Twitter

சிவகார்த்திகேயனின் SK 21 பட லுக்: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம், கடந்த ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாவீரன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியேன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் SK 21 படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றது. SK 21 படத்திற்காக சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றி வித்தியாசமான லுக்கில் நடித்து வருகிறார். தனது ஹேர் ஸ்டைல் கூட தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கேப் அணிந்தபடி வலம் வருகிறார்.

 Sivakarthikeyan: Sivakarthikeyan’s SK 21 look photo trending on Twitter

SK 21-ல் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும், அதற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இதுவரை சிவகார்த்திகேயன் லுக் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயனின் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஹாலிவுட் ஹீரோ ஸ்டைலும், பாலிவுட் ஹீரோ லுக்கும் கலந்த கலவையாக சிவகார்த்திகேயன் செம்ம ஸ்மார்ட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவில் பாதி ஹேர் ஸ்டைல் தெரிந்தாலும், அவரது லுக் எப்படி இருக்கும் என ஓரளவு கெஸ் பண்ண முடிகிறது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த போட்டோ ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விரைவில் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ்கே 21 படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X