Sivakarthikeyan: ரஜினியை தொடர்ந்து விரைவில் அஜித்துடன்... கூட்டணியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான், தயாரிப்பாளர், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அஜித்துடன் சிவகார்த்திகேயன் கூட்டணி?
சின்ன திரை வழியாக சினிமாவில் என்ட்ரியானவர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகின. அதனைத் தொடந்து இந்தாண்டு மாவீரன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் வரும் பொங்கல் ஸ்பெஷலாக அயலான் திரைப்படம் வெளியாகிறது.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பல தடைகளை கடந்து இப்போது வெளியாகவுள்ளது. பட்ஜெட் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு என அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து அயலான் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் அயலான் படத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 12ம் தேதி அயலான் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனிடையே அயலான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அயலான் படம் குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.
அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆகியோர் பற்றியும் சிவா பேசியிருந்தார். சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக மாஸ் காட்டிய போது, அவரை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டியிருந்தார் அஜித். அப்போது முதலே அஜித் - சிவகார்த்திகேயன் காம்போ இணையுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அயலான் ப்ரொமோஷனில் அஜித்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதாவது அஜித்துடன் பைக் டூர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அடிக்கடி பைக் டூர் சென்று வருகிறார் அஜித். அவருடன் இயக்குநர் ஹெச் வினோத், மஞ்சு வாரியர் ஆகியோர் பைக் டூர் சென்றிருந்தனர். அதேபோல் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் பைக் டூர் செல்ல முடிவு செய்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அயலான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தலைவர் 171ல் நடிக்க தனக்கு ஆஃபர் வரவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











