Sivakarthikeyan: மாவீரனை பாராட்டிய சூப்பர் ஸ்டார்... ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

காஷ்மீர்: சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.

காஷ்மீரில் நடைபெற்று வரும் SK 21 ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதுகுறித்து தனது டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், மாவீரன், ஜெயிலர் படங்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 Sivakarthikeyan: Sivakarthikeyan wishes Rajinikanths Jailer a mega success

தலைவருக்கு நன்றி... ஜெயிலருக்கு வாழ்த்து: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான மாவீரன், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட், அரசியல் என பக்கா கமர்சியல் படமாக உருவாகியிருந்தது மாவீரன்.

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த மாவீரன், முதலில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் மாவீரன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியது. அதனால் ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூலை 14ல் மாவீரனை ரிலீஸ் செய்தனர்.

சோலோவாக களமிறங்கிய மாவீரன், பாக்ஸ் ஆபிஸில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. மாவீரன் ரிலீஸாகும் முன்பே SK 21 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனிடையே திரையரங்குகளில் 25 நாட்களை கடந்த மாவீரன், 11ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் நாளை திரையரங்குகளில் ரிலீஸாக, சிவகார்த்திகேயனின் மாவீரன் நாளை மறுநாள் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனையடுத்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், மாவீரன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு நேரடியாக போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 Sivakarthikeyan: Sivakarthikeyan wishes Rajinikanths Jailer a mega success

மாவீரன் படத்தை முழுவதும் என்ஜாய் செய்துள்ளதாக கூறிய ரஜினி, வித்தியாசமான கதைகளில் நடித்து வருவதாக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளாராம். இதனால் உற்சாகமான சிவகார்த்திகேயன், "இவ்வளவு பிஸியான நேரத்திலும் மாவீரன் பார்த்துவிட்டு போனில் அழைத்து பாராட்டிய ரஜினி சாருக்கு நன்றி" எனக் கூறியுள்ளார். மேலும், "ஜெயிலர் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் எனவும், நாளை ஜெயிலர் டே என்றும்" எமோஷனலாக பேசியுள்ளார்.

ஜெயிலர் படத்தை இயக்கியுள்ள நெல்சன், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், அனிருத் உட்பட ஜெயிலர் படக்குழுவினருக்கு எமோஷனலாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X