Sivakarthikeyan: தாறுமாறாக ரெடியாகும் SK 21 ஃபர்ஸ்ட் லுக்... சிவகார்த்திகேயன் வைப் லோடிங்!

சென்னை: சிவகார்த்திகேயன் வரும் 17ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லோடிங்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், அயலான் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து சிவா நடித்து வரும் எஸ்கே 21 படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பது மட்டுமே இதுவரை கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

 Sivakarthikeyan: Sivakarthikeyans SK 21 First Look Poster work loading

அதேபோல் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்த சிவகார்த்திகேயன், ஜிம் ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் கெட்டப்பிலும் வலம் வந்தார். அதேநேரம் படக்குழுவில் இருந்து இதுவரை சிவகார்த்திகேயனின் லுக் குறித்து போஸ்டர் எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் டைட்டில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டிலுடன் சிவகார்த்திகேயனின் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடியாகும் மேக்கிங் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் தெரியவில்லை என்றாலும், வரும் 16 அல்லது 17ம் தேதி தரமான சம்பவம் இருக்கும் என்பது கன்ஃபார்மாகியுள்ளது. அதேபோல் ஏஆர் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணையும் எஸ்கே 23 படத்தின் அப்டேட்டும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கே 21 படப்பிடிப்பு 80% முடிந்துவிட்ட நிலையில், கமலுக்காக காத்திருக்கிறதாம் படக்குழு. இந்தப் படத்தில் கமல் ஒரு கேமியோ ரோல் செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஷூட்டிங் மட்டுமே மிச்சம் இருப்பதால், கமலின் வருகைக்காக எஸ்கே 21 படக்குழு வெயிட்டிங்கில் உள்ளதாம். அதன்பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் தெரியும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X