Sivakarthikeyan: வெளியானது SK 21 டைட்டில் டீசர்... அமரனாக அதிரடி காட்டும் சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர் தற்போது ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. ராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆக்‌ஷனில் அதிரடி காட்டியுள்ளார். இதுவரை ரசிகர்கள் பார்க்காத சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.

அமரனாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
மாவீரன், அயலான் வெற்றியைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது 21வது படமாக உருவாகி வந்த எஸ்கே 21 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்த டீசர் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்டாக அமைந்துள்ளது.

 Sivakarthikeyan: Sivakarthikeyans SK 21 has been titled Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள எஸ்கே 21 படத்துக்கு அமரன் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மிலிட்டரி ஜானரில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் ரொம்பவே மாறியுள்ளார். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் மிரட்டலாக மாறிய சிவகார்த்திகேயன், ரிஸ்க்கியான காட்சிகளிலும் அதிகம் நடித்துள்ளதாக தெரிகிறது.

தற்போது வெளியான அமரன் டைட்டில் டீசரில் சிவகார்த்திகேயனின் போர்ஷன் மட்டுமே இடம்பெற்றுள்ளது. சாய் பல்லவி உட்பட மற்ற நடிகர்கள் பற்றிய எந்த காட்சிகளும் அதில் இடம்பெறவில்லை. அதேநேரம் இது பயோபிக் படம் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர் முகுந்த் வரதராஜன் 2014ம் ஆண்டு ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்தார். முன்னதாக அவர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார். இதனை அடிப்படையாக வைத்தே சிவகார்த்திகேயனின் அமரன் படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முகுந்த் என்ற கேரக்டரில் நடித்துள்ளதையும் அமரன் டீசரில் காட்டியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

வில்லேஜ் ஹீரோ, ப்ளே பாய் போன்ற கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது முதன்முறையாக ராணுவ வீரராக நடித்துள்ளார். முக்கியமாக இந்தப் படம் முழுவதும் சிவகார்த்திகேயன் சீரியஸான கெட்டப்பில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அமரன் டைட்டில் டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த டைட்டில் டீசரை வெளியிட்டுள்ள உலக நாயகன் கமல்ஹாசன், "பிறந்தநாள் காணும் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். அமரன் திரைப்படத்தின் டைட்டில் டீஸரை வெளியிடுவதில் மகிழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X