Sivakarthikeyan: என்ன இது! சிவகார்த்திகேயன் ஸ்கூல் பையன் மாதிரி மாறிட்டாரு? மிரட்டும் SK 21 கெட்டப்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனிடையே எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஸ்கூல் பையன் லுக் போட்டோ வைரலாகி வருகிறது.

ஸ்கூல் பையன் லுக்கில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய எஸ்கே 21 படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் விரைவில் எஸ்கே 21 படத்தின் டைட்டில் அல்லது சிவகார்த்திகேயனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சிவாவின் கேரியரில் இந்தப் படத்தில் தான் முதன்முறையாக டபுள் ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் அப்பா, மகனாக நடித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக தனது கெட்டப்பை வேற லெவலில் மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். எஸ்கே 21 படத்திற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்த சிவா, சில தினங்களாக தலையில் கேப் மாட்டியபடி வலம் வந்தார். அப்போது அடர்த்தியாக மீசை, தாடி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ஸ்கூல் பையன் லுக்கில் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். இதற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியதோடு, மீசை, தாடி இல்லாமல் செம்ம க்யூட்டாகிவிட்டார்.
இந்த இரண்டு லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனின் போட்டோ வெளியாகி வைரலாகியுள்ளது. முக்கியமாக இந்த இரண்டு போட்டோகளிலும் ஒரே சட்டையை அணிந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதனை பார்க்கும் போது ரியலாகவே அப்பா, மகன் போல மாஸ் காட்டுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். முன்னதாக நேற்று மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருந்தார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











