SK 23: ஆரம்பத்திலேயே SK 23 படத்துக்கு வந்த சிக்கல்... ஏஆர் முருகதாஸால் அப்செட்டான சிவகார்த்திகேயன்?
சென்னை: சிவகார்த்திகேயன் நாளை தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு அவரது 21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகிறது. இன்னொரு பக்கம் ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்புக்காக சிவகார்த்திகேயன் ரெடியாகிவிட்டார். ஆனால் திடீரென இந்தப் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எஸ்கே 23 படத்துக்கு வந்த சிக்கல்: சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் மார்க்கெட் வேல்யூ கூடிக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய பேனர் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இப்போது லைகா, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இந்நிலையில் நாளை சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு எஸ்கே 21 படக்குழுவினர் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, எஸ்கே 21 படத்தின் டைட்டில், சிவகார்த்திகேயனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று மாலை வெளியாகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ், அனிருத், நாயகி ருக்மணி வசந்த் உட்பட எஸ்கே 23 படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து விரைவில் எஸ்கே 23 படப்பிடிப்பை தொடங்க ரெடியாக இருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் எஸ்கே 23 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது எஸ்கே 23 ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்புக்கு வெளிமாநில அவுட்டோர் யூனிட்களை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் இனி எந்தப் படங்கள், சீரியல்கள் ஆகியவற்றின் படப்பிடிப்புக்கும் அவுட்டோர் யூனிட் வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். வெளிமாநில யூனிட்களை பயன்படுத்துவது இல்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சில படக்குழுவினர் மட்டும் மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்கே 23 படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இப்படியொரு சிக்கல் வந்திருப்பதால், சிவகார்த்திகேயன் அப்செட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அதன் பின்னர் எஸ்கே 23 படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











