Sivakarthikeyan: அயலான் ரிலீஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. சிவகார்த்திகேயனின் SK 21 டைட்டில் ரெடி?

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கலுக்கு மாறியது.

இதனையடுத்து விரைவில் அயலான் படத்தில் இருந்து புதிய அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Sivakarthikeyan: SK 21 First Look will be released with Ayalaan on Pongal 2024

அயலானுடன் வெளியாகும் எஸ்கே 21 அப்டேட்: சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது பண்டிச்சேரியில் நடைபெற்று வரும் எஸ்கே 21 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார். விரைவில் சென்னையிலும் எஸ்கே 21 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். இருப்பினும் இதுவரை சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 லுக் வெளியாகவில்லை.

அதேபோல், இந்தப் படத்தின் டைட்டில் குறித்தும் படக்குழு அப்டேட் கொடுக்கவில்லை. இந்நிலையில், எஸ்கே 21 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த இரண்டுமே அயலான் படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், வரும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கிய அயலான், பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அயலான் படத்துடன் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அயலான் திரைப்படம் அதிக நாடுகளில், அதிக ஸ்க்ரீன்களில் வெளியாகவுள்ளது.

இதன் காரணமாக எஸ்கே 21 அப்டேட்டையும் அயலானுடன் வெளியிட்டால் செம்மையாக ரீச் ஆகும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அதன்படி, இந்த பொங்கல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தான் செம்ம கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. இதனிடையே ரஜினியின் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களும் பொங்கலுக்கு வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X