குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..தை திருநாள் வாழ்த்து கூறிய திரைப்பிரபலங்கள்!
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், வீடுகளில் வண்ணகோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தை திருநாள் வாழ்த்துக்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி என இருவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து. மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது.

தித்திக்கும் தை திருநாள்: வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, தனது கடுமையான முயற்சியால் தற்போது கதையில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை 2 படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்க உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சூரிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும். தற்போது சூரி காளையுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

வாரிசை வரவேற்க காத்திருக்கிறோம்: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் தாங்கள் அப்பா, அம்மா ஆக போவதாக மகிழ்ச்சி செய்தியை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர். இதையடுத்து அண்மையில் இவருக்கு வளைகாப்பு தடபுடலாக நடைபெற்றது. தற்போது, இந்த தம்பதியினர் தையில் எங்கள் வாரிசை வரவேற்க காத்திருக்கிறோம்.. அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளனர்.

பொங்கல் வாழ்த்துக்கள்: சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில், தற்போது ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், மகாலட்சுமி மட்டும் பொங்கல் வைத்து தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கலோ.. பொங்கல்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வது சீசனில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை மைனா நந்தினி. கிராமத்து சாயலில் வசனங்களை பேசி தனது எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த நந்தினி, தற்போது சின்னத்திரை சினிமா என அனைத்திலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் குடும்பத்தோடு இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அன்பும் ஆசையும் பொங்க இன்பமும் இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ.. பொங்கல் வாழ்த்துகளை கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











