Ajithkumar: அஜித்தின் பாராட்டில் நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் அமரன் (Amaran). கடந்த 2022 ஆண்டு தீபாவளிக்கு பிரின்ஸ், இந்த ஆண்டு பொங்கலுக்கு அயலான், மீண்டும் இந்த ஆண்டு தீபாவளிக்கு அக்டோபர் 31ஆம் தேதி அமரன் என தொடர்ந்து பெரிய விழாக்களில் மட்டுமே படங்களை ரிலீஸ் செய்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இதில் பிரின்ஸ் ஒர்க் அவுட் ஆகவில்லை. அயலான் சிறப்பாகவே கை கொடுத்தது. இந்நிலையில் அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என படக்குழு நம்புகின்றது. காரணம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நேற்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இசை வெளியீட்டுக்கு முன்னதாக படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இசை வெளியீட்டு (Amaran Audio Launch) விழாவில் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித் குறித்து பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

sivakarthikeyan amaran ajithkumar

அமரன் படம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சிவகார்த்திகேயனின் 22வது படம்.

அஜித்: இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், " நண்பர் ஒருவர் நடத்திய தீபாவளி கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கு கதவைத் திறந்ததும் அஜித் சார் இருந்தார். நான் அவரைப் பார்த்து ஷாக்காகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்ததும் கை கொடுத்து, வெல் கம் டூ பிக் லீக் (Welcome to the big league) எனக் கூறினார். எனக்கு புரியவில்லை சார் எனக் கூறினேன். உடனே அவர், உங்களின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் பயப்படுகின்றார்கள் என்றால் நீங்கள், Welcome to the big league தானே" எனக் கூறியதாக கூறினார்.

sivakarthikeyan amaran ajithkumar

விஜய்: சிவகார்த்திகேயன் இதைக் கூறியதும் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதுமட்டும் இல்லாமல், விஜய் குறித்தும் சிவகார்த்திகேயன் பேசினார். அதாவது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, நடிகர் மற்றும் ஆர்.ஜே. விஜய் மற்றும் கீர்த்தி சிவகார்த்திகேயனை நோக்கி, தளபதி விஜய் கொடுத்த கிஃப்ட்களில் எது உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்? தளபதி விஜய் உங்களுக்கு துப்பாக்கியும் கொடுத்தார், வாட்சும் கொடுத்தார், இந்த இரண்டில் உங்களுக்கு எது ஸ்பெஷல் என கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன், ' தளபதி கொடுத்த அன்புதான்' என பதில் அளித்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

sivakarthikeyan amaran ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X