Vijay: துப்பாக்கிய விட தளபதி விஜய் கொடுத்த கிஃப்ட்ல எனக்கு இதுதான் ஸ்பெஷல்.. சிவகார்த்திகேயன் பளீச்!
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமரன் படம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்ட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சிவகார்த்திகேயனின் 22வது படம்.

படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசுகையில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரிடத்தில் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அன்புதான்: குறிப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, நடிகர் மற்றும் ஆர்.ஜே. விஜய் மற்றும் கீர்த்தி சிவகார்த்திகேயனை நோக்கி, தளபதி விஜய் கொடுத்த கிஃப்ட்களில் எது உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்? தளபதி விஜய் உங்களுக்கு துப்பாக்கியும் கொடுத்தார், வாட்சும் கொடுத்தார், இந்த இரண்டில் உங்களுக்கு எது ஸ்பெஷல் என கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன், ' தளபதி கொடுத்த அன்புதான்' என பதில் அளித்தார்.

கோட்: சிவகார்த்திகேயன் இவ்வாறு பதில் கூறியதும் அரங்கத்தில் இருந்த ரசிம்கர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் விஜய் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியைக் கொடுக்கும் படியாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சினிமாவில் இருந்து விலகும் விஜய், தனது இடத்தில் சிவகார்த்திகேயனை விட்டுச் செல்கின்றார் எனக் கூறினர். அதாவது விஜய்யின் படம் துப்பாக்கி. அதனால்தான் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுத்தார் எனவும் பேசப்பட்டது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு விஜய் வாட்ச் பரிசாக அணிவித்தார்.



Click it and Unblock the Notifications











