பராசக்தி படத்தோட ஹைலைட்டே இதுதான்.. வள்ளுவர் கோட்டத்தில் ஓபன் பண்ண சிவகார்த்திகேயன்!
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று திறந்து வைத்துள்ளனர். 4 நாட்களுக்கு பராசக்தி கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். 1960களில் இருந்த ரயில் வண்டி செட், வீடுகள், கடை வீதி, எல்லாத்துக்கும் மேலாக குடிசையில் போடப்பட்ட டெண்ட் கொட்டா என பராசக்தி உலகத்திற்கே நம்மை கூட்டிச் செல்லும் முயற்சியை படக்குழு செய்துள்ளது.
மேலும், பராசக்தி படத்தின் 10 நிமிட வீடியோவை யூடியூபில் காண முடியாது என்றும் அந்த டெண்ட் கொட்டா சென்று பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது காட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பராசக்தி படத்தின் முதல் விழாவாக நடைபெற்ற இன்றைய விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் படக்குழுவின் உழைப்பை கொண்டாடி பேசினார். மேலும், பராசக்தி படத்தில் என்னவெல்லாம் ஹைலைட் இருக்கின்றன என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
ஸ்டூடண்ட்ஸ் பவர் தான் ஹைலைட்: பராசக்தி படத்தில் ஸ்டூடன்ஸ் பவர் தான் மிகப்பெரிய ஹைலைட். சுதா மேம் இந்த படத்துக்காக சுமார் 4 ஆண்டுகள் உழைத்துள்ளார். யூஜி, பிஜியே பண்ண அவங்க கிட்டப் போய் நான் அதன் பிறகு எந்தவொரு ரிசர்ச்சும் செய்யத் தேவையில்லை. இந்த படம் முக்கியமான ஒரு பிரச்சனையை பேசுகிறது. அதை தாண்டி காதல், பாசம், வீரம், புரட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ் உள்ளது. இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக பராசக்தி ஒரு நல்ல செலிபிரேஷனாக இருக்கும் என சிவகார்த்திகேயன் பேசினார்.

எப்போதுமே நீங்க தான் என் ஹீரோ: அதர்வா குறித்தும், ஸ்ரீலீலாவின் முதல் தமிழ் படம் பற்றியும் பேசிய சிவகார்த்திகேயன் ரவி மோகன் சார் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். இன்று வரை பல படங்களில் வெற்றிகரமாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் வில்லனாக நடிப்பது எல்லாம் வேறலெவல். அதனால் தான் டைட்டிலில் முதலில் ரவி மோகன் பெயரையே போட்டோம். ரவி மோகன் சார் இந்த படத்தில் தான் நீங்க வில்லன். ஆனால், எனக்கு எப்போதுமே நான் கல்லூரியில் இருந்து பார்த்து ரசித்த ஹீரோ தான் நீங்க என சிவகார்த்திகேயன் பேசி ரவி மோகனையும் ஹேப்பியாக்கி விட்டார்.


Click it and Unblock the Notifications











