சிவகார்த்திகேயனின் சர்ச்சை பேச்சு.. தனுஷ் சம்பள பாக்கி வைத்தாரா? பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்தில் தான் நான் முழுசா சம்பளம் வாங்கி இருக்கிறேன். இதுவரை நான் நடித்த படத்தில் எனக்கு சரியான சம்பளம் வந்தது இல்லை என்று பேசி இருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானத் திரைப்படம் அமரன். இப்படத்தை. ராஜ்குமார் பெரியசாமி இயக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து வெற்றி விழா நடைபெற்றது.

சர்ச்சையான பேச்சு: இந்த விழாவில், சிவகார்த்திகேயன், கமல் சார், எனக்கு ரொம்ப சரியாக சம்பளம் வந்தது சார். ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்துவிட்டது சார். இப்படி நடப்பதெல்லாம் அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு செழியன் அண்ணனுக்கு நல்லாத் தெரியும். என்னுடைய படங்களின் ரிலீஸுக்கு முன் பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸில்தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் இருக்கறது மட்டும் இல்லாமல், வாங்கிய சம்பளத்தையும் திரும்பி வாங்கிக்கொண்டு போகிற ஆட்களும் இருக்கிறார். ஆனால், படம் ரிலீஸுக்கு ஆறு மாதம் முன்பே சம்பளம் கொடுத்து, அதையும் தாண்டி, மரியாதையை கொடுப்பதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம். உங்களுக்கு தெரியாதது இல்லை. நீங்கள் எல்லாத்தையும் பார்த்துதான் வந்திருக்கிறீர்கள் என்று பேசிய சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
தனுஷ் சம்பள பாக்கி வைத்தாரா: இதுகுறித்து பேசிய அந்தணன், சிவகார்த்திகேயனுக்கு சின்ன நடிகை போதும்பா என்று இருந்த நேரத்தில், அன்னைக்கு டாப்ல இருந்த ஹன்சிகா மோத்வானியை கொண்டு வந்து ஹீரோயினாக போட்டு சிவகார்த்திகேயனை வளர்ந்துவிட்டவர் மதன் அவரை மறந்துவிட்டார். அதே போல சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தவர் தனுசும் கூட, அப்ப தனுஷூம் சம்பள பாக்கி வச்சாரா என்பதை எல்லாம் தெளிவாக சொல்லாமல், பொத்தம் பொதுவாக போகிற போக்கில் சிவகார்த்திகேயன் இப்படி பேசியது அனைவரையும் காயப்படுத்தி உள்ளது. முன்பு போல சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்திருந்தால், சிவகார்த்திகேயன் பேசியதற்கு அவர் மீது ஒரு விசாரணையை வைத்திருப்பார்கள்.
மன்னிப்பு கேட்டார்: சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மாதவன் ஆங்கில பத்திரிக்கை அளித்த பேட்டியில், என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி, அவரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவைத்து, எந்த தயாரிப்பாளர் பணம் தரவில்லையோ அவர் பெயரை சொல்லாமல், பொதுவாக பேசியது சரியில்லை என அவரே மன்னிப்பு கேட்ட வைத்தார்கள். ஆனால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து விட்டதால், சினிமாவில் பலவிஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
பின்புலம் யார்: தற்போது சிவகார்த்திகேயனுக்கு பின்புலமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. இதனால், தான் யார் என்னை என்ன செய்துவிடமுடியும் என்று நினைத்து வாய்க்கு வந்ததை பேசுகிறார். சிவகார்த்திகேயனுக்கு மேடை புதிது கிடையாது, ஒரு மேடையில் நான் பதட்டத்தோடு பேசிட்டேன், அந்த நேரத்துல என்னமோ தோணுச்சு நான் பேசிட்டேன் அப்படி எல்லாம் அவர்கள் சொல்ல முடியாது. ஏன் என்றால், அவர் வளர்ந்ததே மேடையில் பேசித்தான் இதற்கு பிறகாவது சிவகார்த்திகேயன் நிதானமாக பேச வேண்டும என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











