அஜித் சார் ஸ்டைலுல ஒன்னு சொல்லணும்னா?.. சிவகார்த்திகேயன் செம ஸ்பீச்

சென்னை: ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் வெற்றி பெற்று படிப்படியாக முன்னேறி ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர் தமிழ் சினிமாவின் டாப் 10 கதாநாயகர்களில் ஒருவர்.

முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன்

முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன்

மெரினா படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் தாக்குப்பிடிக்க மாட்டார் என்றே பலரும் கணித்தனர். ஆனால் தனது திறமையை வளர்த்துக்கொண்டு அவர்களின் கணிப்புகளை தவிடு பொடியாக்கியவர். மேலும் டாக்டர் படம் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தும் கெத்து காட்டினார். சமீபத்தில் அவர் நடித்த ப்ரின்ஸ் படம் தோல்வியை சந்திக்க அடுத்ததாக மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய இருக்கிறது.

ஆகஸ்ட் 16 -1947 ஆடியோ வெளியீட்டு விழா

ஆகஸ்ட் 16 -1947 ஆடியோ வெளியீட்டு விழா


திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களை ஒருகாலத்தில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இப்போது பல ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக சென்றுகொண்டிருக்கிறார். அந்தவகையில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயன் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சிவகார்த்திகேயனின் செம ஸ்பீச்

சிவகார்த்திகேயனின் செம ஸ்பீச்

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், " படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இயக்குநர் பொன்குமாரின் மெனக்கெடல் தெரிகிறது. அவருக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துகள். முதல் படமே அவர் பீரியட் படமாக எடுத்திருப்பது மிகப்பெரிய சவால். அதையும் 49 நாள்களில் முடித்திருக்கிறார். இப்படத்தில் அனைத்துமே சிறப்பாகவே இருக்கிறது.

கார்த்திக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்

கார்த்திக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்

கார்த்திக் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். யாரின் சாயலும் இல்லாமல் தனித்துவமாக தனது பாணியில் நடிப்பார். நேரில் பார்த்தபோதுகூட டார்லிங் ஹவ் ஆர் யூ என சொல்லும்போதே நாம் ஃப்ளாட் ஆகிடுவோம். அதேபோல்தான் கௌதம் கார்த்திக்கும். நான் பெரிய நடிகரின் மகன் என்பதை அவர் எப்போதும் காட்டிக்கொண்டதில்லை. திருமணம் என்றாலே கிண்டல் செய்து பழகிவிட்டோம். ஆனால் அதுதான் நமது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். அதற்கு கௌதம் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள்.

அடுத்தது முக்கியமான ஸ்டேஜ்

அடுத்தது முக்கியமான ஸ்டேஜ்

ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன். ஏழாம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழாவை ஜெய் தொகுத்து வழங்கினார். ஆனால் அதற்கு நான் ஸ்க்ரிப்ட் செய்தேன். அதன் பிறகு எங்கேயும் எப்போதும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நான் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு அவரது தயாரிப்பில் நடித்தேன். இப்போது சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். அடுத்து முக்கியமான ஸ்டேஜ் அது விரைவில் தெரியவரும்.

அஜித் சார் ஸ்டைலுல ஒன்னு சொல்லணும்னா

அஜித் சார் ஸ்டைலுல ஒன்னு சொல்லணும்னா

வெற்றி கேரியரை டிசைன் செய்யும். ஆனால் கேரக்டர்தான் வாழ்க்கையை டிசைன் செய்யும். அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.ஒருவர் வளர்ந்தால் சந்தோஷப்படுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், எப்படியாவது நம் கூட இருப்பவர்கள் வளர்ந்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் சிலர்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்தான் முருகதாஸ். அஜித் சார் ஸ்டைலுல சொல்ல வேண்டும் என்றால், "நம்ம கூட இருக்கவங்கள நாம நல்லா பார்த்துக்கிட்டா மேல இருக்கவன் நம்மள நல்லா பார்த்துக்குவான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X