Ayalaan release date: ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்.. அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அயலான்: சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த அயலான் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
தள்ளிப்போன படம்: கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளன.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அயலான் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். அதன்படி, அயலான் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
பொங்கல் ரேஸ்: சீயான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தங்கலான் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதே போல பிரபாஸின் கல்கி படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் பெரிய ரிஸ்க் எடுத்து அயலான் படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளார். இதனால், இந்த பொங்கலுக்கு மிகப்பெரிய படங்களின் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்த படம் வசூலை அள்ளும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











