Ayalaan: சிவகார்த்திகேயன் கேரியர்ல அயலான் தான் பெஸ்ட்... டீசர்லயே சர்ப்ரைஸ் இருக்கும்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாவீரன் சூப்பர் ஹிட்டானது.
அதனைத் தொடர்ந்து தற்போது அவர் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது.
திடீரென இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது செம்ம மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.

அயலான் டீசரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்: மெரினா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். முன்னணி இயக்குநர்கள், பெரிய பேனர்களின் தயாரிப்பு என சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் வெளியான நிலையில், இந்தாண்டு மாவீரன் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அயலான், பட்ஜெட் பிரச்சினையால் பாதியிலேயே நின்று போனது.
பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகும் அயலான் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். தமிழில் முதல் ஏலியன்ஸ் சயின்ஸ் பிக்ஸன் திரைப்படமாக அயலான் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு மிகப் பெரிய அளவில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டதே கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தானாம். அதாவது ஒவ்வொரு காட்சியும் நாம் நிஜத்திலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு செம்ம ஃபேண்டஸியாக இருக்கும் என இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரசிகர்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத த்ரில்லிங்கான அனுபவம் நிச்சயம் எனவும், இதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் கேரியரில் அயலான் தான் ரொம்பவே பெஸ்ட்டாக இருக்கும் எனக் கூறியுள்ள ரவிக்குமார், விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்றுள்ளார். அதேபோல், அயலான் தீபவளிக்கு வெளியாவது கன்ஃபார்ம் எனவும், டீசரில் அதற்கான சர்ப்ரைஸ் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அயலான் வெளியான பிறகு, தமிழில் இதுவரை இப்படியொரு சயின்ஸ் பிக்ஸன் படம் வெளியானதே இல்லையென சொல்லும் அளவிற்கு இது உருவாகி வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











