உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் தற்போது அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பை கமல் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

விக்ரம் அப்டேட் இல்லை

விக்ரம் அப்டேட் இல்லை

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வரும் என அறிவிப்பு வெளியான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் அப்டேட் தான் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தற்போது விக்ரம் படத்தின் அப்டேட் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

டாக்டர் படத்தின் மூலம் 100 கோடி ஹீரோவாக மாறியுள்ள சிவகார்த்திகேயனுக்கு தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டான், சிங்கப்பாதை என படு பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெருமை தேடித் தரும்

பெருமை தேடித் தரும்

"சில வேலைகள் சந்தோசத்தை தரும்; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி ஃபிலிம் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும்! தம்பி சிவகார்த்திகேயன் , இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்!" என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இயக்குநர் யார் தெரியுமா

இயக்குநர் யார் தெரியுமா

2017ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை இயக்கியவர் தான் இந்த ராஜ்குமார் பெரியசாமி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இவர் தான் இயக்கப் போகிறார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்

சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்

அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்.. சினிமாவின் இரு மாபெரும் சக்திகளான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்ஸ் பிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியான விஷயம். மேலும், நண்பர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இனைந்து பணியாற்றப்போவது எனக்கு கிடைத்த பாக்கியம் என சிவகார்த்திகேயன் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X