Maaveeran public Review:மாவீரன் சூப்பர்...சிவகார்த்திகேயன் சும்மா தெறிக்கவிட்டு இருக்காரு..பொதுமக்கள் கருத்து!
சென்னை: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.மேலும், மிஷ்கின், யோகிபாபு, சரிதா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கூஸ்பம்ஸ்: மாவீரன் படம் எதிர்பார்த்ததைவிட சூப்பரா இருக்கு, சின்ன வயசில் இருந்தே நான் சிவகார்த்திகேயன் பேன்ஸ், இந்த படத்தை பார்த்தை பிறகு அவர் மீது இன்னும் மரியாதை கூடி இருக்கு. சிவகார்த்திகேயன் சும்மா வேறலெவலில் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளில் கூஸ்பம்ஸ் தான். எதிர்பார்த்ததை விட படம் வேறமாதிரி இருக்கு என்றார்.
பக்கா வசனம்: படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள், அனைத்து பாட்டும் சூப்பர், பீஜிஎம் சும்மா தரமா இருக்கு. அதே போல படத்தில் வரும் வசனமும், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைகாட்சி என இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் என்று படம் பார்த்த ரசிகர் ஒருவர் கூறினார்.

படம் விறுவிறுப்பா இருக்கு: இடைவேளைக்கு பிறகு, படம் விறுவிறுப்பாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள் என்றார் படம் பார்த்த ஒரு ரசிகர்
செதுக்கி இருக்கிறார்: மடோன் அஸ்வின் படத்தை சும்மா செதுக்கு செதுக்குனு செதுக்கி இருக்கிறார். புது இசையமைப்பாளர் இசை அருமை. பிஜிஎம் தீயாக இருக்கிறது. இடைவேளை காட்சி வேற லெவலில் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் மாஸ், காமெடி, ஃபேன்டஸி, எமோஷன் அனைத்தும் படத்திற்கு சரியான அளவு இருக்கிறது. சிவகார்த்திகேயனின் வெற்றிப்பட ஹிட்டில் மாவீரன் படமும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











