‘மாவீரன்’ படத்தின் 10 நாள் வசூல்.. இயக்குநர் கோட்டை விட்டது தான் காரணமா? இனி அதற்கு வாய்ப்பு இல்லை!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் ரூ 100 கோடி கிளாப்பில் இணையும் என எதிர்பார்த்த நிலையில், பத்து நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபு முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார். ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமான என்பதை இயக்குநர் மடோன் அஸ்வின் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்.

இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றது.சிறந்த வசனத்திற்கான விருதினையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினையும் பெற்று முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரையை பதித்தார் இயக்குநர்.
சிவகார்த்திகேயனின் மாவீரன்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக இத்திரைப்படம் ஜூலை 14ந் தேதி திரையரங்கில் வெளியானது.
10 நாள் வசூல்: அதன்படி ரிலீஸான நான்கே நாட்களில் உலகளவில் ரூ.50 கோடி வசூலித்த இத்திரைப்படம், இரண்டாம் வாரத்தில் முடிவில் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் வார முடிவில் இப்படம் ரூ.73 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.46 கோடி வசூலித்துள்ள இப்படம் சென்னையில் இதுவரை ரூ.4.9 கோடி வசூலித்துள்ளது.

இனி வாய்ப்பே இல்லை: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து ரூ100 கோடி கிளாப்பில் இணைந்த நிலையில், மாவீரன் திரைப்படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மாவீரன் படத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்த போது படம் இரண்டாம் வாரத்தில் சரியாக கல்லாக் கட்டாததால், 100 கோடி கிளாப்பில் இணைவது கேள்விக்குறி ஆகி உள்ளது.
கோட்டை விட்ட இயக்குநர்: அதற்கு காரணம் இப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்த விஷயத்தை சரியாக கொண்டு சேர்க்கவில்லை. முந்தைய படத்தில் சொல்ல வந்த கருத்தை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்த இவர் இந்த படத்தில் அதை கோட்டைவிட்டுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிவகார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இந்த தோய்வுக்கு காரணம் என்ற பேச்சு ஆகவே எடுக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











