சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

சென்னை: தமிழ் சினிமாவில் திரைக்கு வந்து மெகா ஹிட்டான படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் கலாச்சாரம் பெருகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் வந்த புது படங்களை விட ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் வசூலில் இரட்டிப்பு லாபம் அடைந்தது. அதேபோன்று வரும் மார்ச் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ரஜினிமுருகன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2024இல் ரீ ரிலீஸ் ஆன படங்கள்: 2004ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் புது படத்திற்கு முன்பதிவு செய்வது போன்றே டிக்கெட் புக் செய்து கண்டு களித்தனர். அப்போது இருந்த வரவேற்பை விட பெருமளவில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். மேலும், ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Rajinimurugan Keerthy suresh

பின்பு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா அமைத்த மாஸ் பின்னணி இசை இன்றும் அஜித் ரசிகர்களின் ரிங்டோனாக இருந்து வருகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளே ரூ.10 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.

அழகி: ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்திருந்த அழகி திரைப்படம் கடந்தாண்டு ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களை கண்ணீரில் நனைய வைத்தது.

பொன்ராம் - சிவகார்த்திகேயன் காம்போ: மனம் கொத்தி பறவை, மெரினா போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார். ஆனால், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. வசனங்களும் பெரிதளவில் பேசப்பட்டன.

சிவகார்த்திகேயனுக்கு தொடர் வெற்றி: பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி காம்போவை மக்களவில் பெரிதளவில் வரவேற்றனர். அதன் பின்பு அதே கூட்டணியில் ரஜினிமுருகன் திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ரசிகர்கள் சிரித்து கொண்டே இருந்தனர். காதல், காமெடி, ஆக்சன் என சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு வெற்றி படமாகவும் அமைந்தது. இப்படம் வசூலையும் வாரி குவித்தது. பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி வந்தாலே படம் ஹிட் என பேசப்பட்டது.

ரீ ரிலீஸ் ஆகும் ரஜினிமுருகன்: திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் இப்படத்தை திரையில் காெண்டாட ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் -சூரி காம்போவில் உருவான காமெடி காட்சிகளை ரீல்ஸ்களில் பார்த்து ரசித்து வந்தாலும், திரையில் புது அனுபவத்தை பெற காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X