சிவகார்த்திகேயனின் மாவீரன் முதல் சிங்கிள் வெளியானது.. பட்டையை கிளப்பும் சீனா..சீனா.. பாடல்!
சென்னை : சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று மாவீரன் திரைப்படத்தில் இருந்து "சீனா..சீனா..ஆனோமே சீனா" பாடல் வெளியாகி உள்ளது.
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஸ்கின், நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும், இப்படத்திற்கு தெலுங்கில் மாவீருடு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மண்டேலா
நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்து கடந்த 2021ம் ஆண்டு தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானத் திரைப்படம் மண்டேலா.இந்த படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக யோகிபாபு நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். பஞ்சாயத்து தேர்தலை மையக்கருவாக வைத்து உருவான இப்படத்தில், தனி மனிதனின் வாக்களிக்கும் உரிமை குறித்து தெளிவாக சொல்லப்பட்டிருந்தது.

இரண்டு தேசிய விருது
பலரின் பாராட்டுகளை பெற்ற மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு தேசியவிருதுகள் கிடைத்தது. திரைப்படத்தை எழுதி, இயக்கி இருந்த அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைப் பிரிவில் வசனத்திற்காக தேசிய விருது என இரண்டு விருதுகள் கிடைத்தது.

சிவகார்த்திகேயனின் மாவீரன்
மண்டேலா படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் கலைஞன் மாவீரன் ஆகும் கதை என்று கூறப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும், வில்லனாக மிஸ்கினும் நடித்துள்ளனர்.

முதல் பாடல் ரிலீஸ்
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. பரத் ஷங்கரின் இசையில்,கபிலன் மற்றும் சிஎம் லோகேஷின் பாடல் வரியில், சீனா.. சீனா.. ஆனோமே சீனா என்ற பாடலை அனிருத் பாடி உள்ளார். அட்டகாசமாக வெளியாகி உள்ள பாடலில் சிவகார்த்திகேயன் சும்மா அதிரடியாக ஆட்டம் போட்டுள்ளார். சற்று முன் வெளியான இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் மீது முழுகவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. அனூப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டு நாயகி மரியா நடித்திருந்தார். டான் திரைப்படம் போல இப்படம் வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் காலை வாரிவிட்டதால், மாவீரன் படம் வெற்றி பெற கடுமையாக உழைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











