Soori: என்னண்ணே பண்ணி தொலைச்சிருக்கீங்க.. சூரியை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான ஹீரோ இமேஜை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் சூரிக்கு ஹீரோவாக மாஸ் வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் வரும் 23ம் தேதி சூரி, மலையாள நடிகை அன்னா பெண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கொட்டுக்காளி படம் ரிலீசாகவுள்ளது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்களில் தொடர்ந்து சூரி உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் குறித்து சூரி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் சொன்ன விஷயங்களையும் பேசியுள்ளார்.

நடிகர் சூரி: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. படத்தில் நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். காமெடியனாக அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வந்த நடிகர் சூரி, கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மூலம் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூரிக்கு ஹீரோவாக மிகப்பெரிய அளவில் கை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகின்றன.
ஹீரோவாக அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகுமார், உன்னிமுகுந்தன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து சூரி நடித்திருந்த கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று கொடுத்தது. இதையடுத்து வரும் 23ம் தேதி சூரி, மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கொட்டுக்காளி படம் ரிலீசாக உள்ளது. இந்த படம் காலை முதல் மாலை வரை நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக உருவாகியுள்ளதாக சூரி முன்னதாக இந்த படத்தின் ப்ரமோஷனின்போது கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கொட்டுக்காளி படம்: கொட்டுக்காளி படத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து பார்க்கும்படியும் படம் கண்டிப்பாக மற்ற படங்களை காட்டிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் சூரி மேலும் தெரிவித்திருந்தார். கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் இரண்டாவது படமாக கொட்டுக்காளி உருவாகியுள்ளது. படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், முன்னதாக சூரியுடன் இணைந்து சில பேட்டிகளை சிவகார்த்திகேயன் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை தயாரிப்பாளராகவும் தம்பியாகவும் பல்வேறு கோணங்களில் சூரி தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனுடனான நட்பு: சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் மிகப் பெரிய ஹீரோவாக இருக்கும் அவர் கமர்சியல் படங்களை தயாரித்துவிட்டு போயிருக்கலாம், ஆனால் அப்படி இல்லாமல் வித்தியாசமான கதைக்களங்களை எடுத்து சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்து வருவது குறித்து சூரி பாராட்டு தெரிவித்துள்ளார். தங்களது உறவு நண்பர்களாக, தொடர்ந்து அண்ணன் -தம்பியாக தற்போது அவரது தயாரிப்பில் நடித்துள்ளது வரை மேம்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சூரி.
மிரண்ட சிவகார்த்திகேயன்: மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த சூரியை தோத்தாத்ரி உள்ளிட்ட கேரக்டர்களால் பங்கமாக கலாய்த்து இருப்பார் சிவகார்த்திகேயன். தற்போது கொட்டுக்காளி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், அண்ணே என்னண்ணே பண்ணி வச்சிருக்கீங்க, பயமாக இருக்கிறது என்று கூறியதாக சூரி தெரிவித்துள்ளார். படத்தை பார்த்து ஒருமாதிரியாக ஆகிவிட்டதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டதாக சூரி கூறியுள்ளார். இந்த போஸ் பாண்டியை, இந்த தோத்தாத்ரியைதான் தான் கலாய்த்தேனா என்று அவர் கேள்வி எழுப்பியதாகவும் சூரி தெரிவித்துள்ளார். இந்த திறமையை வைத்துக் கொண்டுதான் தன்னிடம் அப்படி காமெடியாக நடித்துக் கொண்டிருந்தீர்களா என்றும் சிவகார்த்திகேயன் கேள்வி கேட்டதாகவும் சூரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











