Sivakarthikeyan - இமானின் முன்னாள் மனைவியை டார்ச்சர் செய்தாரா சிவகார்த்திகேயன்?.. அய்யோ அவரே சொன்னது இதுதான்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதனையடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

Sivakarthikeyan Talks about D.Imman Ex Wife Monika

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

க்ளீன் பாய் இமேஜ்: கோலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த வருடம் ஒரு பேட்டி அளித்தார். அதில், 'இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து சிவகார்த்திகேயனிடமும் நான் நேராகவே கேட்டுவிட்டேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

என்ன பிரச்னை: இதனையடுத்து இமானுக்கு சிவகார்த்திகேயன் என்ன துரோகத்தை செய்திருப்பார் என்று பலரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். ஒருதரப்பினரோ இமானும் அவரது முதல் மனைவியான மோனிகாவும் பிரிவதற்கு சிவாதான் காரணமாக இருப்பார். அதைத்தான் இமான் சுற்றி வளைத்து சொல்கிறார் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் டி. இமான் மற்றும் அவரது முதல் மனைவி மோனிகா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், 'நான் இமான் அண்ணா குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறேன். அவரை நான் அண்ணா என்றும் அவரது மனைவி மோனிகாவை அண்ணி என்றும்தான் அழைப்பேன். இப்போதெல்லாம் இமான் அண்ணாவுக்கு ஃபோன் பண்றேனோ இல்லையோ அண்ணிக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் செய்துட்டே இருப்பேன். அவங்களோ, ஏன் கொழுந்தனாரே இப்படி பண்ணுறீங்க என சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு'' என்றார்.

மோனிகா விளக்கம்: சிவகார்த்திகேயனின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்துவருகிறார்கள். முன்னதாக இமானின் குற்றச்சாட்டு குறித்து அவரது முன்னாள் மனைவி அளித்த விளக்கத்தில், 'சிவகார்த்திகேயன் பற்றி இமான் சொன்னதை வெளியில் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அவர் ரொம்பவே நல்லவர். எனக்கும், இமானுக்கும் பிரச்னை வந்தபோது சிவகார்த்திகேயன் நியாயத்தின் பக்கம் நின்றார். சொல்லப்போனால் இமானுக்கு சிவா சப்போர்ட் செய்யவில்லை. அதன் காரணமாகத்தான் இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவரது மனநிலை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்""என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X