தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்னை நமக்கு எதுக்கு?.. பட்டுனு போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.. எஸ்கே செம உஷார்

சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் நிற்கிறது. இந்தச் சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷ் - ஐஸ்வர்யா பற்றி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Dhanush Sivakarthikeyan Aishwarya

ராயன்: அவரது நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. தனுஷின் 50ஆவது படமாக உருவான அதனை அவரே இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். ராயன் படத்தை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்துவருகிறார். மேலும் இளையராஜாவின் பயோபிக், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என பயங்கர பிஸியாக இருந்துவருகிறார்.

பிரிந்த தனுஷ்: தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் Vs சிவகார்த்திகேயன்: இதற்கிடையே சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்துவந்தார் தனுஷ். 3 படத்தில் காமெடி ரோலை கொடுத்த தனுஷ்; எதிர்நீச்சல் படத்தை சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தயாரிக்கவும் செய்தார். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் கடந்த சில காலமாகவே இருவருக்கும் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ட்ரெண்டாகும் வீடியோ: சிவகார்த்திகேயனின் பேச்சை அடுத்து அவர் தனுஷைத்தான் தாக்கினார் என்று பேச்சுக்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து பழைய வீடியோக்கள் ட்ரெண்டாகிவருகின்றன. அந்தவகையில் 3 பட சமயத்தில் அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியிருந்தார்.

பிரச்னை நமக்கு எதுக்கு: அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ்; ஐஸ்வர்யாவுக்கு தமிழ் தெரியாது என்று சொல்ல; அதற்கு ஐஸ்வர்யாவோ எனது தமிழுக்கு என்ன குறைச்சல் என்று கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் சிரித்து சமாளித்துக்கொண்டிருக்கும்போது; தனுஷோ நான் அவரை தேடி போகல ஐஸ்வர்யாதான் தன்னை தேடி வந்தார் என்று கூறினார். உடனே ஐஸ்வர்யாவோ சிவகார்த்திகேயனை பார்த்து இதுக்கு நீங்க இப்போ என்ன கவுண்ட்டர் கொடுக்கப்போறீங்க என்று கேட்டுவிட்டு; இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு டப்பிங்கிற்கு என்னுடன் தான் வர வேண்டும் என்று சொன்னார். உடனே சுதாரித்துக்கொண்ட சிவகார்த்திகேயன், அவங்க குடும்ப பிரச்னை நமக்கு எதுக்கு என்று ரசிகர்களை பார்த்து பேசி சமாளித்துவிட்டார். இந்த வீடியோவை இப்போது நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து; எஸ்கே செம உஷார் ப்பா என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X