கொட்டுக்காளி தோல்வியா வெற்றியா?.. சிவகார்த்திகேயன் சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்

சென்னை: சூரி நடிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த அந்தப் படம் தமிழ்நாட்டில் போதுமான வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரித்த கனா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகின. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தார். கூழாங்கல் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சர்வதேச அளவில் அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன.

sivakarthikeyan kottukkaali

தியேட்டரில் விட்டிருக்கக்கூடாது?: அதேசமயம் தமிழ்நாட்டில் அந்தப் படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. மாற்று சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடினாலும் வெகுஜன ரசிகர்கள் கொண்டாடவில்லை. மேலும் இந்தப் படத்தை தியேட்டரில் விட்டிருக்கக்கூடாது என்று இயக்குநர் அமீர் ஒரு மேடையில் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் படத்தின் ரிசல்ட்டை பார்த்து இனி சூரி இந்த மாதிரியான படத்தில் நடிக்கமாட்டார் என்று இயக்குநர் வினோத்ராஜ் ஓபனாக கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

சிவகார்த்திகேயன் பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்தப் படம் குறித்து தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் தோல்வி என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்பதை எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் நடிக்கும் படங்கள் 120 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய்வரை பணம் போட்டு எடுக்கப்படுகின்றன. எனவே அதற்கு ஈடான வசூல் எடுக்க வேண்டுமென்பது கட்டாயமாகிறது.

இரண்டு கோடி ரூபாய் வசூல்: ஆனால் கொட்டுக்காளி படம் இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்தது. 110 திரையரங்குகளில் அந்தப் படத்தை வெளியிட்டோம். கொட்டுக்காளிக்கு முன்னதாக சூரி நடித்திருந்த கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அதிக விலை கொடுத்து இந்தப் படத்தை வாங்க வந்தார்கள். ஆனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இது அந்த மாதிரியான படம் இல்லை என்று சொல்லிவிட்டேன். பட ரிலீஸுக்கு முன்பே நான் படக்குழுவிடம், இந்தப் படத்தை மக்கள் ஒன்று கொண்டாடுவார்கள் இல்லை நிராகரிப்பார்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.

கொண்டாடலாம்: அதேபோல் புதிதாக நாம் ஒன்றை செய்கிறோம். இது ஒரு தொடக்கம்தான். ஒரு நாள் இதே மாதிரியான ஒரு படம் கொண்டாடப்படும்போது நாம் கொட்டுக்காளி வெற்றியை கொண்டாடிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டேன். என்னை பொறுத்தவரை கொட்டுக்காளி ஒரு வெற்றிப் படம்தான். ரசிகர்களை நான் எப்போதுமே குறை சொல்லமாட்டேன். கமல் இயக்கிய எத்தனையோ படங்கள் வரவேற்பை பெறவில்லை. ஆனால் அவர் அன்பே சிவம், குணா போன்ற படங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டுதானே இருந்தார். அவர் யாரையுமே குறை சொல்லவில்லையே. கொட்டுக்காளி படத்தை தயாரித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X