தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்!

நம்ம வீட்டு பிள்ளை படத்தை வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கும், தனது பாசமான தம்பி தங்கைகளுக்கும் அண்ணன் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சென்னை: கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய படம் நம்ம வீட்டு பிள்ளை.

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களின் சரிவுக்குப் பின்னர், வெளியான நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு நல்ல வசூலையும் பாராட்டியும் தேடித் தந்துள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

டிக் டாக்

டிக் டாக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அனிருத் பாடிய "காந்த கண்ணழகி" பாடலில் வரும் "கும்முற டப்பர கும்முற டப்பர" லிரிக்ஸ் பல ரசிகர்களால் டிக் டாக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. எங்கள் அண்ணன் பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவா ஹேப்பி

சிவா ஹேப்பி

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்கள் கொடுத்த சரிவால், சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன், பாண்டியராஜன் இயக்கத்தில் சென்டிமென்ட் படத்தை கையில் எடுத்து சேஃப் கோல் அடித்து விட்டார். திரையரங்குகளில் 25 நாட்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் சிவாகார்த்திகேயன் ஹேப்பி ஆகியுள்ளார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

நம்ம வீட்டு பிள்ளை வெற்றிக்கு பிறகு வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள ஹீரோ படத்தையும் மிகவும் நம்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன். விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் உருவாகி வருவதால், நிச்சயம் அந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி ட்வீட்

நம்ம வீட்டு பிள்ளை படம் 25 நாட்கள் கடந்துள்ள நிலையில், படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இயக்குநர் பாண்டிராஜ், படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் படத்திற்காக உழைத்த அனைத்து சினிமா கலைஞர்கள் மற்றும் படத்தை புரமோட் செய்த ஊடகத் துறையினர் என பலருக்கும் தனது நன்றியினை தெரிவித்த சிவகார்த்திகேயன். தனது ரசிகர்களான பாசமான தம்பி, தங்கைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X