சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருடன் இணைய உள்ள சிவகார்த்திகேயன்!

சென்னை: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் டாக்டர். இந்த படம் ரிலீசுக்கு காத்துள்ளது.

Recommended Video

முன்னனி இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த Sivakarthikeyan| Atlee, Sivakarthikeyan Garden, Aarti Baby

இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். இதிலும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இது மட்டுமின்றி ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் வெளிவரவுள்ளது. இறுதி கட்ட பணிகளே எஞ்சியுள்ளது.

ஹிட் அடித்த பாடல்கள்

ஹிட் அடித்த பாடல்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. படக்குழுவினர் டீசர்/ட்ரைலர் ஏதும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் செல்லம்மா, நெஞ்சமே, ஓ பேபி என படத்தின் மூன்று பாடல்களும் வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு

இதையடுத்து சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நிறைவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த வேளையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக டான் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

சிவகார்த்திகேயன் படங்களையும் தயாரித்து வருகிறார். அதில் சில காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 வருடத்தில் 5 படங்கள் நடித்து கொடுக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.

தேசிங்கு பெரியசாமி

தேசிங்கு பெரியசாமி

சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் இயக்குனர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் பெயர் முதன்மை பெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X