அரசியல் தளத்தில் முதன்முறையாக அழுத்தமான வெற்றி.. ஸ்டாலினுக்கு குவியும் சினிமா பிரபலங்களின் வாழ்த்து!
சென்னை: முதல் முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர போகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்
இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள டிவிட்டில்
தமிழக தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் உதயநிதி சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சவுந்தர் ராஜா
நடிகர் சவுந்தர் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில் தமிழ் நாட்டின் முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர்
ஸ்டாலின் சார் அவர்களுக்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலின் சகோதரருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

அருண் பாரதி
பாடலாசிரியர் அருண் பாரதி பதிவிட்டுள்ள டிவிட்டில் கடின உழைப்பு வெற்றிபெறும் என்பதை நிரூபித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின், இனி அடுத்த 5 ஆண்டுகள் மக்களின் தேவைகளையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற நிகரில்லா அன்பும் வாழ்த்துகளும் என குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதிக்கு வாழ்த்து
உதயநிதி ஸ்டாலினுக்கும் பாடலாசிரியர் அருண்பாரதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, அரசியல் தளத்தில் முதன்முறையாக அழுத்தமான வெற்றியை பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பான சேவையாற்றிட இதயம் நிறைந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

சூரியன் உதயமாகிவிட்டது
நடிகர் அசோக் செல்வன் பதிவிட்டுள்ள டிவிட்டில், சூரியன் உதயமாகிவிட்டது... வாழ்த்துகள் ஸ்டாலின் சார்.. உதயநிதி புரோ மற்றும் அறிவாலயம்.. வளம், சமூக நீதி, கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் வலுவான நிர்வாகத்தை தர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன்
இதேபோல் இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய திரு
ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக்கழக வெற்றியாளர்களுக்கும் அமையவிருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்கள்.. நல்லாட்சி நடக்கட்டும்.. நாட்டு மக்கள் நலம் பெறட்டும்.. உதயநிதி எம்எல்ஏ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











