Eid Mubarak: சிவகார்த்திகேயன் முதல் டிடி நீலகண்டன் வரை.. ரமலான் பண்டிகையை கொண்டாடும் பிரபலங்கள்!
சென்னை: ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மசூதி வெளியே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல பிரியாணி கொடுங்க பாய் என மீம்ஸ்களும் பறக்கின்றன. இந்த முறை சிலிண்டர் இல்லை என பிரியாணி கொடுக்காமல் விட்டு விடாதீங்க என்றும் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

கோலிவுட்டில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் ரமலான் வாழ்த்து: ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் மசூதி ஒன்றின் வெளியே எடுத்துக் கொண்ட சூப்பரான போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பராசக்தி, தாய் கிழவி என அசத்திய சிவகார்த்திகேயன் அடுத்து சேயோன் படத்திலும் நடித்து வருகிறார்.
டிடி நீலகண்டன் வாழ்த்து: சின்னத்திரை தொகுப்பாளினி டிடி நீலகண்டன் தனது கையில் முழுவதும் மருதாணி பூசிக்கொண்டு அதில், நிலாவை வரைந்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்த போட்டோவை வெளியிட்டுள்ளார். டிடி நீலகண்டன் ரசிகர்கள் அவருக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரமலான் கொண்டாடிய மும்தாஜ்: இளம் வயதில் கவர்ச்சியாக சினிமாவில் நடித்து வந்த மும்தாஜ் சமீப காலமாக தான் செய்தது எல்லாம் தவறு என இறை மார்க்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாக வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
பர்தா போட்ட தாமரை: பிக் பாஸ் தாமரைச் செல்வி முழுவதுமாக தனது முகத்தை பர்தா போட்டு மூடிக்கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் டிவி பிரபலங்களான புகழ், மணிமேகலை, ஷிவின் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரமலான் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் துரந்தர் 2 மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











