அரைசதம் அடித்த ‘தல’ அஜித்.. ரசிகர்களுக்கு போட்டியாக வரிசை கட்டி வாழ்த்தும் பிரபலங்கள்!

சென்னை: 'தல' அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

VALIMAI First Look Update | SHOCKING! படக்குழு எடுத்த அதிரடி முடிவு

எந்தவொரு சமூக வலைதளத்திலும் நடிகர் அஜித் இல்லாத நிலையிலும், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அத்தனை சமூக வலைதளங்களிலும் இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நடிகர்கள் ஜீவா, சிவகார்த்திகேயன், பிரேம்ஜி, அருண் விஜய் என ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்டர் வாழ்த்து

என்னை அறிந்தால் படத்தின் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்த நடிகர் அருண் விஜய், நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் கொண்டாட்டத்தை விட ரசிகர்கள் பாதுகாப்பை மிகவும் முக்கியம் என கருதும் நல்ல உள்ளம் கொண்டவர் அஜித் என அருண் விஜய் பாராட்டி உள்ளார்.

ரத்னகுமார் வாழ்த்து

மேயாத மான், ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் கிரீடம் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். முகவரி மற்றும் கிரீடம் படம் தான் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத் வாழ்த்து

வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலை போட்டு தல ரசிகர்களை ஆட வைத்த ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டியர் தல அஜித் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் அனிருத்.

வேதிகா வாழ்த்து

முனி, காஞ்சனா 3 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை வேதிகா, ஹேப்பி கேக் டே டு தல அஜித் என ட்வீட் போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், அனைவரது ஃபேவரைட் ஹீரோவான தல அஜித் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

தல அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏகன் படத்தில் அட்மாஸ்பியராக நடித்த புகைப்படம் முதல் தல அஜித்துடன் கூட நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வரை ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். " நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் - பேரன்புடன் சிவகார்த்திகேயன்" என வாழ்த்தி உள்ளார்.

ஹன்சிகா வாழ்த்து

ஹன்சிகா வாழ்த்து

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஹன்சிகா மோத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே அஜித் சார் என ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார். நடிகர்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு, என ஏகப்பட்ட பிரபலங்களும் தல அஜித்தின் 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X