சிவகார்த்திகேயன் ஏற்கனவே பட்டதெல்லாம் போதாதா... மீண்டும் அதே இயக்குநருடன் கூட்டணியா?
சென்னை: இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
கடந்தாண்டு டான், பிரின்ஸ் என கலக்கிய சிவகார்த்திகேயன், இந்தாண்டு மாவீரன், அயலான் என மாஸ் காட்டவுள்ளார்.
மாவீரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் மீண்டும் தனது பழைய கூட்டணியில் ஒரு படம் பண்ண உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு இது தேவையா?
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையை எட்டிப் பார்த்த சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். ரசிகர்களும் அவரை நம்ம வீட்டுப் பிள்ளையாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் முதல் சூப்பர் ஹிட் கொடுத்தது சிவகார்த்திகேயன் தான்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் சூப்பர் ஹிட் அடிக்க, அதேவேகத்தில் அடுத்தடுத்து டான், பிரின்ஸ் படங்களிலும் நடித்தார். டான், பிரின்ஸ் என இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்தாண்டு அடுத்தடுத்து வெளியாகின. இதில், டான் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவு வசூல் செய்திருந்தது. அதேநேரம் டான் படத்தை நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்தும் வந்தனர்.
இன்னொரு பக்கம் டான் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் சிபி சக்ரவர்த்தியிடம் தனக்கும் ஒரு கதை இருந்தால் ரெடி செய்யும்படி கூறியிருந்தார். இதனால், லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரைக்கதையில் திருப்தியில்லாததால் சிபியை டீலில் விட்டார் சிவகார்த்திகேயன்.
இதனால் மனமுடைந்து இருந்த சிபி சக்ரவர்த்திக்கு சிவகார்த்திகேயன் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். அதன்படி சிபி சக்ரவர்த்தி இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் டானை விடவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் எனவும் தெரிகிறது. இந்நிலையில், இது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதிய கதையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். இது ரஜினிக்காக ரெடியான கதை என்றும், அவர் நோ சொன்ன பிறகே அதில் சிம்பு கமிட்டானதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்டாருக்கு சொன்ன கதையை தான், சிவகார்த்திகேயனுக்காக சிபி சக்ரவர்த்தி மாற்றி வருகிறாராம். தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்திற்காக, தேசிங் பெரியசாமி, சிபி சக்ரவர்த்தி ஆகியோரும் கதை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











